Kubera: ``1000, 2000 கோடி ஹீரோயின்'னு சொல்றது எல்லாத்தையும் மறந்துடுங்க'' - ராஷ்மிகா குறித்து தனுஷ்
தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.
தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 15) ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ராஷ்மிகா குறித்து பேசிய தனுஷ், "ராஷ்மிகா மந்தனாவுக்கு சமீப காலமாக 1000 கோடி ஹீரோயின், 2000 கோடி ஹீரோயின் என்கிற டேக் ஒட்டப்பட்டுள்ளது. அதையெல்லாம் மறந்துடுங்க, ஒவ்வொரு படத்துக்கும் குபேரா படத்தில் போட்டதை போல ஹார்ட்வொர்க் போட்டு நடிங்க, அதுதான் நமக்கு ரொம்பவே முக்கியம், இந்த வசூல் அதிர்ஷ்டம் எல்லாம் தானாகவே உங்களை தேடி வரும்.
அவங்க ரொம்ப கஷ்டப்பட்டு இந்த ஸ்டேஜுக்கு வந்திருக்காங்க. கூர்க் பொண்ணாக இருந்து இப்போது பான் இந்தியன் ஸ்டாராக உருவெடுத்திருக்கிங்க. இது ஒரு நல்ல பயணம்” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து நாகார்ஜுனா குறித்து பேசிய தனுஷ், “ நாகார்ஜுனா சார்கூட வொர்க் பண்றது பென்டாஸ்டிக் எக்ஸ்பீரியன்ஸ். அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். அவர் சினிமா பார்த்துட்டு வளர்ந்தேன். அவர் கூட ஸ்கிரீன் ஷேர் பண்ணிக்கிறது மேஜிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...