கூகுள் பிக்சலுக்கு இணையாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்!
Life On Boat: வீடு, உடைமைகளை விற்று, பாய்மரப்படகில் குடியேறிய இந்திய குடும்பம்- கனவு நனவானது எப்படி?
கப்பலில் தங்களது முழு நேர வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறது ஓர் இந்திய குடும்பம்.
முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியான கேப்டன் கௌரவ் கௌதம் மற்றும் முன்னாள் ஊடக நிபுணரான அவரது மனைவி வைதேகி மற்றும் இவர்களின் மகள் கயா ஆகியோர் 42 அடி நீளமுள்ள கப்பலில் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
மிதக்கும் படகு தான் இவர்களது வீடு, இதில்தான் தங்களது அன்றாட வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர்.

இதற்காக தம்பதியினர் கிட்டத்தட்ட தங்கள் எல்லா உடைமைகளையும் விற்றுள்ளனர். தங்களது உடைமைகளை படகில் பயணிப்பதற்காகவே 6000 கிலோவிலிருந்து வெறும் 120 கிலோவாக குறைத்து இருக்கின்றனர்.
படகில் எந்தெந்த பொருள்கள் வைத்திருக்க முடியுமோ, அவற்றை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.
வைதேகி மண்பாண்ட பொருள்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர். ஆனால் இந்த படகில் தங்களது வாழ்க்கையை வாழ்வதற்காக அதனைக் கைவிட்டு உள்ளார்.
இது இவர்களின் நீண்ட கால கனவு என்று கூறுகின்றனர். நிதி கட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் இந்த கனவு கைகூடாமல் இருந்த நிலையில், கோவிட் காலத்தில் இந்த கனவு மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது. ஏனெனில் உலக அளவில் படகு விலை அப்போது குறைந்து காணப்பட்டதால், இதனை இந்தக் குடும்பம் சாத்தியமாக்கியுள்ளது.
இவர்களின் மகன் கயா, தினமும் அன்றாட பள்ளிக்கு செல்லும் மற்ற மாணவர்களைப்போல் அல்லாமல்... வீட்டில் இருந்தே அவரின் கல்வியை தொடர்கிறார். பாட புத்தகங்களை தாண்டி, நிறைய பாடங்களை நேரடியாக கற்று கொள்கிறார்.
அவர் கடல்வாழ் உயிரினங்களை பற்றி நேரடியாக கற்றுக் கொள்கிறார். இந்தப் பயணங்களின்போது வெவ்வேறு கலாசாரங்களை அனுபவிக்கிறார். கயாவுக்கு விடுமுறை என்பது முடிவில்லாதது என்று கூறுகின்றனர், அவரது பெற்றோர்.
பாய்மரப் படகில் வாழ்வது அதன் சவால்களைக் கொண்டுள்ளது, புயல் நிறைந்த கடல்களில் பயணிப்பது மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இவர்களின் வாழ்க்கை முறையை `தி ரீவா ப்ராஜெக்ட்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.