செய்திகள் :

LSG vs MI: "மும்பை அணி சிறப்பாகத்தான் விளையாடியது; ஆனால்..." - வெற்றி குறித்து ரிஷப் பண்ட்

post image

ஐ.பி.எல் தொடரின் நேற்றையைப் போட்டியில் மும்பை அணியும், லக்னோ அணியும் மோதின. இதில் மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது.

இந்நிலையில் அணியின் வெற்றி குறித்துப் பேசிய ரிஷப் பண்ட், "இந்த மைதானம் உண்மையிலேயே விளையாடுவதற்கு மிகச் சிறப்பாக இருந்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே மைதானம் எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கணிக்கத் துவங்கினோம்.

lsg vs mi
lsg vs mi

அதற்கு ஏற்ற மாதிரி விளையாடியதால் எங்களால் மிகச் சிறப்பாக விளையாட முடிந்தது. மிட்சல் மார்ஷ் போன்ற அதிரடியான துவக்கத்தை ஒரு வீரர் அளிக்கும் போது அது மிடில் ஆர்டரில் விளையாடுபவர்களுக்கு இன்னும் போட்டியை எளிதாக்குகிறது.

அந்த வகையிலேயே இந்த போட்டியில் நாங்கள் சூழலைக் கணித்துச் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். அதேபோன்று மும்பை அணியும் இரண்டாம் பாதியில் மிகச் சிறப்பாக விளையாடியது.

இருந்தாலும் எங்களது பந்துவீச்சாளர்கள் இறுதி நேரத்தில் அழுத்தத்தை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அட்டகாசமாகப் பந்துவீசி வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்.

இந்த போட்டியில் ஷர்துல் தாகூர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். அவரைத் தேர்வு செய்தது ஒரு அற்புதமான விஷயம்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

அந்த அளவிற்கு ஷர்துல் தாகூர் சிறப்பாகப் பந்துவீசி எங்களது அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார். அதேபோன்று திக்வேஷ் எங்களது அணியில் மிகச் சிறப்பான பவுலர்களில் ஒருவர். இறுதி நேரத்தில் அவரும் அழுத்தத்தைச் சிறப்பாகக் கையாண்டு வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகச் செயல்பட்டிருக்கிறார்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

PBKS vs RR: "இந்தத் தோல்விகூட நல்லதுதான்" - விவரிக்கும் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்

ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 2... மேலும் பார்க்க

PBKS Vs RR: "ஆர்ச்சர் - சந்தீப் சர்மா கூட்டணி அபாயகரமான கம்போ" - வெற்றி குறித்து சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, பஞ்சாப் பந்த... மேலும் பார்க்க

PBKS Vs RR: "எல்லா நாள்களும் ஒரேமாதிரியாக இருக்கப் போவதில்லை" - ஆட்டநாயகன் ஆர்ச்சர்

ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, ஜெய்ஸ்வால், ... மேலும் பார்க்க

PBKS vs RR: பஞ்சாப்பின் வெற்றியைத் தகர்த்த சேட்டன் சஞ்சு & கோ; ராஜஸ்தான் வென்றது எப்படி?

ஐபிஎல் இன்றைய (ஏப்ரல் 5) போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் நேருக்குநேர் களமிறங்கின. காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்படாமல் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டும் செய்துவந... மேலும் பார்க்க

PBKS vs RR: ``அணிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி'' - மீண்டும் கேப்டனான சஞ்சு சாம்சன்

ஐபிஎல் இன்றைய (ஏப்ரல் 5) போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் நேருக்கு நேர் களமிறங்கின. காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்படாமல் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டும் செய்துவ... மேலும் பார்க்க

CSK vs DC : 'எங்களால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை...' - கேப்டன் ருத்துராஜ் வேதனை

'சென்னை அணி தோல்வி!'சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. சேப்பாக்கத்தில் சென்னை அணியை டெல்லி அணி 15 ஆண்டுகள் கழித்து வீழ்த்த... மேலும் பார்க்க