செய்திகள் :

Marriage Dance: கணவர் அபிஷேக் பச்சன், மகளுடன் சேர்ந்து வைரல் நடனமாடிய ஐஸ்வர்யா ராய்

post image

மும்பையில் நடந்த திருமணம் ஒன்றில் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராய் இருவரும் தங்கள் மகள் ஆராத்யாவுடன் கலந்துகொண்டனர். திருமணத்தில் பாடகர் ராகுல் வைத்யா இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்பாடல்களை விரும்பிக்கேட்ட ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் மற்றும் ஆராத்யா ஆகியோர் மேடைக்குச் சென்றனர்.

பாடகர் ராகுல் வைத்யா பாடிய கஜிரா ரே என்ற பாடலுக்கு மூன்று பேரும் மிகவும் மகிழ்ச்சியுடன் நடனம் ஆடினர். அதனைப் பார்த்து திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். மூன்று பேரும் பாடலுடன் கூடிய நடனத்தில் பங்கேற்றது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனை மணமக்கள் மேடைக்கு வரவழைத்து நடனமாட வைத்தனர். இதிலும் ஆராத்யா கலந்து கொண்டார். ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் 1999ம் ஆண்டு முதல் முறையாக படப்பிடிப்பில் சந்தித்துக்கொண்டனர். அதன் பிறகு அவர்களுக்கு நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். அதன் பிறகு புதிய படம் எதிலும் கமிட் ஆகவில்லை.

சிதாரே ஜமீன் பர் படப் புறக்கணிப்பு விவகாரம்; தயாரிப்பு நிறுவன ப்ரொபைல் படத்தை மாற்றிய ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சிதாரே ஜமீன் பர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.இதற்கான வேலையில் ஆமீர் கான் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மத்திய அரசு பாகிஸ்தான் ஆக்... மேலும் பார்க்க

ஏ.ஆர்.ரஹ்மானும் ஹான்ஸிம்மரும் ராமாயணம் கதைக்கு இசையமைக்கிறார்களா? - தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

பாலிவுட் இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதை திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தயாரிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு 'ராமாயண்' என தலைப்பு வைத்து சமீபத்தி... மேலும் பார்க்க

Met Gala: ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான்..

அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த `மெட் காலா' என்ற நிகழ்ச்சியில் பாலிவுட், ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அங்கு நடந்த பேஷன் ஷோவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக கலந்து கொண்... மேலும் பார்க்க

`தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்து ராணுவ வீரர்கள் செயல்பட்டார்கள்' - பாராட்டி நெகிழும் ஆலியா பட்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.இதனால் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

போர் பதற்றத்தைக் குறைக்கச் சொன்ன ஆலியா பட்டின் தாயார்; குடியுரிமை குறித்து நெட்டிசன்கள் கேள்வி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்து வந்த தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று சொன்னவர்கள் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார்கள்.சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். நடிகர் சல்மான் கான் கூட போ... மேலும் பார்க்க

"தமிழ் சினிமா பாடல்களில் ஆங்கிலம்தான் அதிகம் இருக்கிறது; முன்பெல்லாம்..." - அனுராக் காஷ்யப் வேதனை

`Dev.D', `Black Friday', `Gangs of Wasseypur' படங்கள் மூலம் பாலிவுட்டில் இயக்குநராகப் பிரபலம் ஆனவர் அனுராக் காஷ்யப்.சமீபத்தில் இவர் நடித்திருந்த 'மகாராஜா', 'Rifle Club' படங்களிலும் கவனம் ஈர்த்திருந்தா... மேலும் பார்க்க