குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சட்டக் கல்லூரி மாணவன்: பெண் பலி!
`Mr. Fix-lt-னா அது இவருதான்' - கே.எல் ராகுலைப் புகழ்ந்த மிட்செல் ஸ்டார்க்
ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கே.எல் ராகுலைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலமாக 3 -வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது.
இந்தத் தொடரில் அணியின் வெற்றிக்குப் பலரும் சிறப்பாகப் பங்காற்றி இருந்தார்கள். குறிப்பாக ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்ட கே.எல் ராகுல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் சேஸிங்கில் கடைசி வரை நின்று நிதனமாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கே.எல் ராகுலைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். "பேட்டிங்கில் ஓப்பனிங் விளையாடுகிறார், 6வது இடத்தில் விளையாடச் சொன்னாலும் விளையாடுகிறார். கீப்பிங்கும் செய்கிறார். ஃபீல்டிங்கும் செய்கிறார்.

ப்ளேயிங் 11ல் இல்லாதபோது வீரர்களுக்கு குளிர்பானங்களையும் எடுத்து வருகிறார். கே.எல்.ராகுலை Mr. Fix-lt எனக்கூறலாம். வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சார்பாக விளையாடுகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் " என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...