செய்திகள் :

Mrs & Mr:"விஜய்சேதுபதி மகனும் விஜய் மாதிரி வருவார்; நயன்தாரா, திரிஷா கூட ட்ரோல்..."- வனிதா

post image

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரித்து, நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகி நடித்திருக்கும் படம் 'Mrs and Mr'. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அங்கு அவர் வாங்கிய சம்பளத்தை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளதாக ஏற்கனவே அவர் தெரித்திவிந்தார். இன்று (ஜூலை 11) ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

Mrs and Mr
Mrs and Mr

அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய வனிதா விஜயகுமார், ``ரொம்ப எமோஷ்னலாவும் டென்ஷனாவும் இருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்திருக்கிறேன். ஏற்கெனவே பல பிரச்சனைகளை சந்தித்ததால், பார்த்துக்கொள்ளலாம் என ஒரு தைரியம் இருக்கு. இன்றைய தலைமுறைக்கு இந்தப் படம் பிடிக்கும் என நம்புகிறேன்.

படத்தில் அப்பா படம் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி வருகிறது. அவர் என்னிடம் எதுவும் கேட்கமாட்டார். நானே அவரின் காப்பிரைட் தானே. என் மகள் தெலுங்கில் நடிக்கப்போகிறார். அடுத்து தமிழில் நடிப்பார். என் மகளை நிறைய ட்ரோல் செய்கிறார்கள். விஜய்சேதுபதி மகன் சூர்யாவையும் பீனிக்ஸ் பட விஷயத்தில் கடுமையாக விமர்சனம், கிண்டல் செய்கிறார்கள். நாளைய தீர்ப்பு படத்தில் விஜய்க்கும் இதுதான் நடந்தது. அதை மீறி, அவரின் ஹார்ட்வொர்க்கால் ஜெயித்து, நாளைய முதல்வர் என்ற அளவுக்கு பார்க்கிறோம்.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

விஜய் சேதுபதி மகனும் விஜய் மாதிரி வருவார். என் மகளும் ஜெயிப்பாள். ஆரம்பத்தில் நயன்தாரா, திரிஷாவுக்கும் கூட இப்படிதான் நடந்தது. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதில் பெருமைதான். ஆனால், இங்கு இருப்பவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்பதை மட்டும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Oho Enthan Baby Review: இளமை துள்ளும் காதல் கதையின் ஓப்பனிங்கலாம் நல்லாயிருக்கு... ஆனா ஃபினிஷிங்?

சிறுவயதிலிருந்தே பெற்றோரின் சண்டைகள், அதனால் வீட்டில் நிலவும் பதற்றம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க சினிமாவை தோழனாக மாற்றிக்கொள்கிறான் அஷ்வின் (ருத்ரா). வளர்ந்த பின் சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்ற... மேலும் பார்க்க

Shruti Haasan: "நான் திருமணத்தை மதிக்கிறேன்; ஆனால்..." - நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!

நடிகை ஸ்ருதி ஹாசன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க முடிவு செய்தது குறித்து சமீபத்தில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்..பாட்காஸ்டரான யூடிப்பர் ரன்வீர் அலாபாடியுடன் நடிகை ஸ்ருதி ஹாசன் பாட்காஸ்டில் உரைய... மேலும் பார்க்க

வேள்பாரி: `75 வயசுல... ஸ்லோ மோஷனில் நடந்துவர்ற இந்த ரஜினியை ஏன் கூப்பிட்டிருக்காங்கனு..!’ - ரஜினி

விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி'.இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனைய... மேலும் பார்க்க

வேள்பாரி: `முதல்வர் இருந்த மேடையில் `ஓல்ட் ஸ்டூடண்ட்’னு பேசினேன்; இப்போ வரும்போதே.!’ - கலகலத்த ரஜினி

விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி'.இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனைய... மேலும் பார்க்க