செய்திகள் :

Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்

post image

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் ஆந்திர பிரதேசம் மாநிலம், ஶ்ரீ சத்ய சாய் மாவட்டம், கோரண்ட்லா மண்டல் பகுதியில் புட்டகுண்டலபள்ளே கிராமத்துக்கு அருகில் உள்ள கல்லி தண்டா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் (Murali Naik) வீரமரணம் அடைந்துள்ளார்.

கடந்த வியாழன் (08/05/2025) இரவில் பாகிஸ்தான், காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) எல்லை தாண்டி நடத்திய தாக்குதலில் இவர் உயிரிழந்ததாக தி இந்து வலைத்தளம் தெரிவித்துள்ளது.

ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரில் பீரங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட பதட்டம் மிகுந்த பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த அவரை விமானம் மூலம் டெல்லிக்குக் கொண்டுவர இயலவில்லை. காஷ்மீரிலேயே அந்த இளம் வீரர் உயிரிழந்துள்ளார்.

முரளிநாயக் எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குக்கிராமத்தைப் பார்வையிட்ட காவல் அதிகாரி தி இந்து செய்தி தளத்தில், "முரளி நாயக்கின் துணிச்சலையும் அர்பணிப்பையும் வணங்குகிறோம். அவரது தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது" எனக் கூறியுள்ளார்.

முரளி நாயக்கின் மரணம் பற்றிய செய்தி மாவட்டம் முழுவதும் பரவியதால் கல்லி தண்டா குக்கிராமத்தைச் சுற்றியுள்ள பழங்குடி கிராம மக்கள் அனைவரும் ஆழ்ந்த துயரடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (09/05/2025) முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்துக்கு வருகை தரும் நிலையில், முரளி நாயக் குடும்பத்தினரிடன் இரங்கல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முரளி நாயக்கின் உடல் இறுதி சடங்குக்காக மே 10-ம் தேதி கல்லி தண்டா குக்கிராமத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Doctor Vikatan: வியர்வை வாடையை விரட்ட, பெர்ஃபியூம் உபயோகிக்கலாமா, பவுடர் போடலாமா.. எது சரி?

Doctor Vikatan: எனக்கு இயல்பிலேயே அதிகம் வியர்க்கும். கோடைக்காலத்தில் இன்னும் அதிகம் வியர்க்கும். இதனால் எப்போதும் என் உடலில் வியர்வை வாடை வந்துகொண்டே இருக்கும். வியர்வை வாடையை விரட்ட, பெர்ஃபியூம் உபய... மேலும் பார்க்க

இறுக்கமற்ற பிரா முதல் பாக்ஸர் ஷார்ட்ஸ் வரை.. உள்ளாடை டிப்ஸ்!

அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும், விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என மேலாடைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளாடைகளுக்கு பலரும் கொடுப்பது இல்லை. கிழிந்துபோன, பழைய, இறுக்கமான உள்ளாடைகள் அணிந... மேலும் பார்க்க

``நம் எதிரிகள் கோழை; நாங்கள் வென்றுவிட்டோம்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், நேற்று இரு நாடுகளுக்கிடையே தாக்குல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான 3 மணி ... மேலும் பார்க்க

Kidney Stone: கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

சிறுநீரகக் கற்கள் உருவாக காரணங்கள்; எப்படிக் கண்டறிவது; சிறுநீரகக் கற்கள் தடுக்க, தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்கிறார், சிறுநீரகவியல் நிபுணர் என்.ஆனந்தன். சிறுநீரகக் கல்சிறுநீரகக் கற்கள் உருவாக ... மேலும் பார்க்க

`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' - ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந... மேலும் பார்க்க

Pakistan: தீவிரமடையும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாகிஸ்தானின் நிலை என்ன?

பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும் அதேவேளையில் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராண... மேலும் பார்க்க