சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 4வது காலாண்டு லாபம் சரிவு!
NEET: ``மூக்குத்தி, தோடில் பிட் எடுத்துச் செல்ல முடியுமா? தமிழ்நாட்டுக்கு ஏன் இந்த கொடுமை'' - சீமான்
செய்தியாளர்களை இன்று சந்தித்த சீமான் நீட் தேர்வு கட்பாடு குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார்.
நீட் தேர்வு குறித்து குறித்து பேசிய அவர், “ நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் பெறப்பட்ட கையெழுத்துகள் எங்கே கொடுக்கப்பட்டன? சிற்றூரில் இருக்கும் மாணவருக்கு மருத்துவக் கனவு வரக்கூடாது என்பதற்காகவே நீட் தேர்வு.
நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி என்ற பெயரில் பல ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள்.

வட மாநிலங்களில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதுகிறார்கள். என்னிடம் ஆதாரம் உள்ளது.
மூக்குத்தி, தோடு ஆகியவற்றில் பிட் எடுத்துச் சென்று நீட் தேர்வெழுத முடியுமா என்ன? மூக்குத்தியில் பிட் வைக்கலாம் எனில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாதா? நீட் தேர்வு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறோம். அதற்கு யாரிடத்திலும் பதில் இல்லை.
நீட் தேர்வு எழுதினாலே தரமான மருத்துவராக வர முடியுமா என்ன? மற்ற மாநிலங்களில் இல்லாத கெடுபிடிகள் என் மாநிலமான தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏன் இத்தகைய கொடுமைகள் நடக்கிறது.

அரைஞாண் கயிறை அறுக்கச் சொல்கிறார்கள்,பூணூல்-ஐ கழற்ற சொல்கிறார்கள். தாலியைக் கழற்ற சொல்கிறர்கள். இதெல்லாம் ஒரு ஜனநாயக நாடா? விரும்பிய கல்வியைப் படிப்பதற்கு இந்த நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது. கல்வி ஏன் சுமையாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs