செய்திகள் :

Oscars 2025 `ஒரே இரவில் 4 விருதுகள்; நெகிழ்ச்சியூட்டிய ஆஸ்கர் உரை'- அனோரா இயக்குநர் குறித்து ராஜமௌலி

post image

தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமௌலி, 2025 அகாடெமி அவார்ட்ஸில் அனோரா திரைப்படத்துக்காக விருதுபெற்ற சீன் பேக்கரை வாழ்த்தியுள்ளார். பாலியல் தொழிலாளியின் காதல் குறித்த காமெடி டிராமா படமான அனோரா, 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த படம் (சீன் பேக்கர்), சிறந்த இயக்குநர் (சீன் பேக்கர்), சிறந்த ஒரிஜினல் திரைக்கதை (சீன் பேக்கர்), சிறந்த நடிகை (மைக்கி மேடிசன்), சிறந்த படத்தொகுப்பு (சீன் பேக்கர்) ஆகிய பிரிவுகளில் ‘அனோரா’ விருதுகளை வென்றது.

Anora

இந்த படத்தின் மூலம், ஒரே படத்துக்காக 4 ஆஸ்கர் விருதுகள் வாங்கிய ஒரே நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சீன் பேக்கர்.

சீன் பேக்கரை வாழ்த்திய ராஜ மௌலி, "அனைத்து ஆஸ்கர் வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகள்!

ஒரே இரவில் 4 ஆஸ்கர்களை வென்ற ஒரே ஃபிலிம் மேக்கராக வரலாறு படைத்திருக்கும் சீன் பேக்கருக்கு மிகப் பெரிய பாராட்டுகள்!

ஆஸ்கர் விருது விழாவில் சினிமாக்களை காப்பாற்றுவது பற்றிய உரை உண்மையிலேயே நெகிழ்ச்சியூட்டியது. சினிமா வரும் ஆண்டுகளில் செழித்து வளர வேண்டும்!" என ட்வீட் செய்துள்ளார்.

அனோரா திரைப்படம் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை மையபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது. சீன் பேக்கர் இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் மற்றும் படத்தொகுப்பாளர்.

சீன் பேக்கரின் Oscar உரை:

``நாம் அனைவரும் இன்று இங்கிருக்க, இந்த ஒளிபரப்பைக் காண காண காரணம், நாம் திரைப்படங்களை நேசிக்கிறோம். நாம் எங்கே திரைப்படங்களைக் காதலிக்கத் தொடங்கினோம்? திரையரங்குகளில். ரசிகர்களுடன் இணைந்து திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்பது ஒரு அனுபவம். நாம் ஒன்றாக சிரிக்கவும், அழவும் செய்கிறோம். உலகமே பிளவுபட்டுள்ளதாகத் தோன்றும் இந்த காலத்தில் இது எப்போதையும் விட மிகவும் அவசியமானது. நீங்கள் வீட்டில் பெற முடியாத கூட்டு அனுபவம். இப்போது, திரையரங்குக்கு செல்லும் அனுபவம் ஆபத்தில் உள்ளது.

sean baker

திரையரங்குகள், குறிப்பாக சுதந்திரமான உரிமையாளர்களால் நடத்தப்படும் திரையரங்குகள் மிகவும் சிரமப்படுகின்றன. பெருந்தோற்று காலத்தில் நாம் அமெரிக்காவில் 1000 ஸ்கிரீன்களை இழந்தோம். தொடர்ந்து இழந்து வருகிறோம். இந்த போக்கை நாம் நேர் எதிராக மாற்றாவிட்டால், நம் கலாசாரத்தின் முக்கிய பகுதியை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். இது என்னுடைய போர்க்குரல்" என்று பேசினார்.

மேலும் அவர், "நான் பாலியல் தொழிலாளிகள் சமூகத்துக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் அவர்களது கதைகளைப் பகிர்ந்துகொண்டனர். சில ஆண்டுகளாக அவர்களது வாழ்க்கை அனுபவங்களை என்னிடம் கூறினர். அவர்களுக்கு மரியாதையுடன் நன்றி கூறி, இந்த விருதைப் பகிர்ந்துகொள்கிறேன்." என்றும் பேசியுள்ளார்.

Mikey Madison

சீன் பேக்கருடன் அனோர (Anora) படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து முதன்மை கதாப்பாத்திரத்துக்கான சிறந்த நடிகை விருதை வென்ற மிக்கி மேடிசனும் பாலியல் தொழிலாளிகளுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

Mickey 17 Review: காத்திர அரசியல் பேசும் சயின்ஸ் பிக்ஷன்; `பாராசைட்' இயக்குநரின் அடுத்த படைப்பு!

2054-ம் ஆண்டு நிஃப்ல்ஹெய்ம் என்ற கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்ற, கென்னத் மார்ஷல் (மார்க் ருஃபாலோ) என்ற தோல்வியுற்ற பணக்கார அரசியல்வாதி ஒரு திட்டத்தைத் தீட்டுகிறான். அதற்காகப் பல்வேறு துறைகளில் ஆட்கள... மேலும் பார்க்க

Oscars 2025 Winners List: DUNE to CONCLAVE... ஆஸ்கர் விருது விழாவில் வென்ற திரைப்படங்கள் இவைதான்!

அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் கோலகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த ஆஸ்கர் வி... மேலும் பார்க்க

Oscar Stories 4: `ஜோக்கருக்கு 2 மணி நேரம்தான் தூக்கம்'; இறந்த பிறகு ஆஸ்கர் வென்ற ஹீத் லெட்ஜர்

97-வது ஆஸ்கர் விருதுகள் மார்ச் மாதம் 3 -ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. உலகளவில் அங்கீகாரத்தையும் அடையாளத்தைத் தேடித் தரும் ஆஸ்கர் விருதுகளுக்கென நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அப்படி ஆஸ்கர் வரலாற்றில் ... மேலும் பார்க்க

Oscar Stories 3: `மக்களுக்காக படம்' - 26 வருடக் காத்திருப்புக்குப் பிறகு நோலனுக்குக் கிடைத்த ஆஸ்கர்

97-வது ஆஸ்கர் விருதுகள் மார்ச் மாதம் 3 -ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. உலகளவில் அங்கீகாரத்தையும் அடையாளத்தைத் தேடித் தரும் ஆஸ்கர் விருதுகளுக்கென நீண்ட நெடிய வரலாறுகள் இருக்கின்றன. அப்படி ஆஸ்கர் வரலாற்ற... மேலும் பார்க்க

Oscars 2025 : 97வது ஆஸ்கர் விருது விழா... எந்த ஓடிடியில், எப்போது காணலாம்? வெளியான அப்டேட்!

ஆஸ்கர் விருதுகள்அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. சிறந்த படைப்புகள், கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக பல்வேறு பிரிவுகளில் இவ்விருகள் வழங்கப்பட்டு ... மேலும் பார்க்க

Oscar Stories 2: 'இது ஜோக் இல்ல...' - ஆஸ்கர் மேடையில் தவறாக அறிவிக்கப்பட்ட வின்னர்!

97-வது ஆஸ்கர் விருதுகள் நாளை 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. உலகளவில் அங்கீகாரத்தையும் அடையாளத்தைத் தேடித் தரும் ஆஸ்கர் விருதுகளுக்கென நீண்ட நெடிய வரலாறுகள் இருக்கின்றன. அப்படி ஆஸ்கர் வரலாற்றில் நிகழ்ந்த சி... மேலும் பார்க்க