செய்திகள் :

Pakistan: `ஃபீல்ட் மார்ஷல்' - ராணுவ தளபதி அசிம் முனீருக்கு பதவி உயர்வு! - பின்னணி என்ன?

post image

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி 'ஆபரேஷன் சிந்தூர்'.

மே 7-ம் தேதி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை தகர்த்தது இந்திய ராணுவம்.

இதுகுறித்து, 'நாங்கள் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்களை மட்டும் தான் குறி வைத்தோமே தவிர, பாகிஸ்தான் ராணுவத்தை அல்ல' என்று விளக்கமும் அளித்தது இந்திய ராணுவம்.

ஆனாலும், இந்தியாவின் மீது தாக்குதலைத் தொடங்கியது பாகிஸ்தான். இதற்கு இந்தியாவும் எதிர்வினையாற்றியது. இந்தத் தாக்குதல்கள் ஒருவேளை போராக மாறிவிடுமோ என்று உலக நாடுகள் பயந்துகொண்டிருந்த வேளையில், மே 10-ம் தேதி இரு நாடுகளும் தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தது.

Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

இதற்கான முதல் படியை எடுத்து வைத்தது பாகிஸ்தான் தான். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே இந்தத் தாக்குதல் நடந்தாலும், பாகிஸ்தான் தான் மிகுந்த சேதத்தைச் சந்தித்தது. இதன் விளைவாகவே பாகிஸ்தான் இந்தியாவிடம் வெள்ளைக் கொடியைப் பறக்கவிட்டது.

தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்தியாவிற்கு 'அப்படி பதிலடி கொடுத்தோம்', 'இப்படி பதிலடி கொடுத்தோம்' என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால், 'அவை அனைத்தும் பொய்' என்று நிரூபிக்கும் விதமாக, இந்திய ராணுவம் தாக்குதல் வீடியோக்களையும், இந்திய தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதத்தின் சாட்டிலைட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருக்கு பதவி உயர்வை வழங்கி உள்ளது, அந்நாட்டு அரசு.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் அறிக்கைப் படி, 'ஆபரேஷன் பன்யன்-உம்-மர்சூஸ் மூலம் எதிரிகளுக்கு தகுந்த பதிலடிகளை தந்துள்ளார் அசிம் முனீர். இவரது தலைமையின் கீழ், பாகிஸ்தான் ராணுவம் நம் நாட்டைப் பாதுகாத்துள்ளது. இதற்காக, பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்த சையத் அசிம் முனீருக்கு ஃபீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கப்படுகிறது".

ஃபீல்ட் மார்ஷல் என்பது பாகிஸ்தனின் மிக உயரிய ராணுவப் பதவி. பாகிஸ்தான் நாட்டிலேயே இந்தப் பதவியைப் பெறும் இரண்டாவது நபர் இவர்தான்.

அசிம் முனீர்
அசிம் முனீர்

1959-ம் ஆண்டு, பாகிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை ஜெனரல் அயூப் கான் கைப்பற்றியபோது, அவரே அவருக்கு கொடுத்து கொண்ட பதவி இது.

அதன் பிறகு, இந்தப் பதவி இப்போது அசிம் முனீருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ வலைதளத்தின் தகவலின் படி, ஃபீல்ட் மார்ஷல் தான் பாகிஸ்தான் ராணுவத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முழு பொறுப்பு. நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான அனைத்து விஷயங்களுக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இவர் தலைமை ஆலோசகராக இருப்பார்.

ஃபீல்ட் மார்ஷலாக அசிம் முனீர் என்னென்ன நடவடிக்கைகளை முன்னெடுப்பார்... எந்தக் கொள்கையை முன்மொழிவார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

'விமர்சனங்களைத் தாண்டித்தான் தி.மு.க 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது!" - சொல்கிறார் கே.என்.நேரு

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாத... மேலும் பார்க்க

`ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை... இதுதான் ஸ்டாலினின் கை!' - கேள்விகளை எழுப்பி சாடும் இபிஎஸ்

டெல்லியில் மே 24-ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நியாயமான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டோடு கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த முதல்வர் ஸ... மேலும் பார்க்க

அனகாபுத்தூர் குடியிருப்புகள் புல்டோசர் கொண்டு அகற்றம்; வலுக்கும் எதிர்ப்புகள்; அரசின் விளக்கம் என்ன?

அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் என அங்கு வசித்துவரும் மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு தமிழக அரசு இடித்து வருகிறது.அரசின் இத்தகைய செயலுக்கு மே 17 இயக்கம் உள... மேலும் பார்க்க

Kannada - Hindi சர்ச்சை: `முதலில் வங்கி ஊழியர்களுக்கு இந்த பயிற்சியைக் கொடுங்கள்'- கர்நாடக முதல்வர்

கர்நாடகாவில் எஸ்.பி.ஐ வங்கியில், உள்ளூர் வாடிக்கையாளரிடம் வங்கியின் மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்து, "இது இந்தியா இந்தியில்தான் தான் பேசுவேன். ஒருபோதும் கன்னடத்தில் பேசமாட்டேன்" என்று கூறும் வீடியோ இர... மேலும் பார்க்க

`ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறியவர், என்னை பார்த்து..' - பழனிசாமியின் விமர்சனத்துக்கு ஸ்டாலின் பதில்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு டெல்லி செல்வது, தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது.இது குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க