தைத் திருநாளை முன்னிட்டு மயிலாப்பூரில் பிரமாண்ட கோலப்போட்டி... | Photo Album
Pawan Kalyan: ``பெண்களை அவமதிப்பது ஆண்மை ஆகாது" -ஈவ் டீசிங் செய்பவர்களை எச்சரித்த பவன் கல்யாண்
ஆந்திரபிரதேசம் மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பெண்களை ஈவ் டீசிங் செய்பவர்கள் மற்றும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது தொகுதியான பிதாபுரத்தில் உள்ள பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் தான் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.
பெண்களை அவமரியாதையாக நடத்துவதை ஆண்மை என நினைப்பவர்களை கண்டித்த பவன் கல்யாண், சமூகத்தில் பெண்களின் அடிப்படை பங்களிப்பு குறித்தும் சுட்டிக்காட்டினார்.
"ஒரு பெண்ணுக்கு கஷ்டம் கொடுப்பது உன்னை ஆண்மகனாக ஆக்காது. நீ உன் ஆண்மையை நிரூபிக்க விரும்பினால் ஜிம்மாஸ்டிக்ஸ் செய், ராணுவத்தில் சேர்ந்துகொள், தேசத்துக்கு சேவையாற்று. பெண்களை துன்புறுத்துவது ஆண்மையின் வெளிப்பாடு அல்ல, அந்த எண்ணத்தை நாங்கள் அகற்றுவோம். இது என் எச்சரிக்கை" என் பொதுமேடையில் பேசினார் பவன் கல்யாண்.
சமூகத்தில் பெண்களின் பாத்திரத்தை எடுத்துரைக்கும் விதமாக, "எல்லா வீடுகளிலும் ஒரு பெண் இருக்கிறார். பெண்கள் இல்லாமல் இங்கு படைப்புகள் இல்லை." என்றார்.
மேலும், "காவல்துறையினருக்கு நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். பிதாபுரத்தில் நான் ஈவ் டீசிங் என்ற வார்த்தையைக் கூட கேட்கக்கூடாது. இது என் உத்தரவு." என்றார்.
"என்னால் இங்கு இருக்கும் பெண்களை பாதுகாக்க முடியவில்லை என்றால், நான் துணை முதலமைச்சராக இருப்பதற்கு என்ன அர்த்தம்?" என விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக கேள்வி எழுப்பினார் பவன் கல்யாண்.
பொது இடங்களில் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் நடைபெறுவதாகவும், பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரிப்பதாகவும் ஆந்திராவில் பேச்சுகள் எழுந்த நிலை இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்.