"இந்தியா மீதான வரிவிதிப்பால் ரஷ்ய பொருளாதாரம் கலக்கம்" - ரஷ்யா குறித்து ட்ரம்ப்!
`Please help...' - பிரதமர் மோடிக்கு ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் வைரல் - பின்னணி என்ன?
பெங்களூரு நகரின் போக்குவரத்துப் பிரச்னைகளை எடுத்துரைக்கும் ஐந்து வயது சிறுமியின் கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தக் கடிதம், பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் ’மெட்ரோவின் மஞ்சள் பாதை’ திறப்பு விழாவிற்கு வருகை தந்தபோது எழுதப்பட்டிருக்கிறது.
சிறுமியின் தந்தை அபிரூப் சாட்டர்ஜி இந்தக் கடிதத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த கடிதத்தில் "நரேந்திர மோடி ஜி, இங்கு நிறைய போக்குவரத்து நெரிசல் உள்ளது. நாங்கள் பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு செல்ல தாமதமாகிறது. பாதைகள் மிகவும் மோசமாக உள்ளன. தயவு செய்து உதவுங்கள்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவு இணையத்தில் வைரலானது.
இதேபோல் 2023ஆம் ஆண்டு, 13 வயது சிறுமியான அஸ்மி சப்ரே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திருந்தார்.
பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளை எடுத்துரைக்கும் இந்த சிறுமியின் கடிதம், நகரவாசிகளின் நீண்டகால கவலைகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
பெங்களூருவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘மஞ்சள் மெட்ரோ லைன்’ ஆகஸ்ட் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனால், சுமார் 30 சதவிகிதம் வரை கார் மற்றும் பஸ்கள் போக்குவரத்து குறையும் என மதிப்பிடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
PM is visiting Bangalore. My 5-year-old girl sees it as her chance to finally fix traffic. pic.twitter.com/EJdzpxSs89
— Abhiroop Chatterjee (@AbhiroopChat) August 10, 2025