செய்திகள் :

Presbyopia: வெள்ளெழுத்துப் பிரச்னைக்குத் தீர்வா? அமெரிக்க சொட்டு மருந்தின் பின்னணி என்ன?

post image

மிடில் ஏஜ்ல இருக்கிற பலர், நியூஸ் பேப்பரையும் செல்போனையும் கண்ணுக்குப் பக்கத்துல, கொஞ்சம் தூரத்துல வெச்சு படிக்கிறதுக்குப் போராடிக்கிட்டு இருக்கிறதைப் பலரும் பார்த்திருப்போம். இதுவொரு நார்மலான பிரச்னைதான்.

நாற்பது வயதுக்கு மேல பக்கத்துல இருக்கிற எழுத்துக்கள் மங்கலா தெரியும்கிறதால, வாசிக்க முடியாம ரொம்ப கஷ்டப்படுவாங்க. அவங்களை அறியாம, பேப்பரையோ, செல்போனையோ தள்ளி வெச்சு வாசிக்க ஆரம்பிப்பாங்க. இத தமிழ்ல 'வெள்ளெழுத்து' பிரச்னைன்னு சொல்வாங்க. மருத்துவர்கள் ப்ரெஸ்பியோபியா (presbyopia)ன்னு சொல்வாங்க. சரி, இந்தப் பிரச்னைக்குக் கண்ணாடி போடாம தீர்வு கிடைச்சா எப்படி இருக்கும்?

webpronews.com
Vizz Eye drop

அமெரிக்காவோட உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drug Administration - FDA) 'விஸ்' (Vizz) அப்படிங்கிற ஒரு சொட்டு மருந்தை அங்கீகாரம் செஞ்சிருக்கு. இந்தச் சொட்டு மருந்தைப் பயன்படுத்தின 30 நிமிடங்களுக்குள்ள, பக்கத்துல இருக்கிற பொருள்களும் தெளிவா தெரியுற அளவுக்குக் கண்களுக்குள் இருக்கிற லென்ஸை அட்ஜஸ்ட் செஞ்சிடுமாம்.

அதுவும் 10 மணி நேரம் வரைக்கும் இந்த எஃபெக்ட் நீடிக்கும்கிறதுதான் இந்தக் கண் சொட்டு மருந்தோட சிறப்பே. தவிர, இந்தச் சொட்டு மருந்தைப் பயன்படுத்துறதால, தூரத்துல இருக்கிற பொருள்களைப் பார்க்கிறதுலேயும் எந்தப் பிரச்னையும் வராதாம்.

இதனால எதாவது பக்க விளைவுகள் வருமான்னு கேட்டீங்கன்னா, சிலருக்கு மங்கலான பார்வை, கண் எரிச்சல் மாதிரியான சங்கடங்கள் ஏற்படலாம்னு சொல்லப்படுது. அதனால, இந்தச் சொட்டு மருந்தைப் பயன்படுத்தி கண்கள் தெளிவா தெரியுற வரைக்கும், வண்டி ஓட்டுறது மாதிரியான முக்கியமான வேலைகளைச் செய்யாதீங்கன்னு FDA அறிவுரையும் சொல்லியிருக்கு.

மிடில் ஏஜ் மக்களோட ஒரு பெரிய கண் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கப்போகுது!

இந்தச் சொட்டு மருந்து வரும் அக்டோபர் மாதம் முதல் மெடிக்கல்ஷாப்ஸில் கிடைக்கும்னு FDA சொல்லியிருக்கு. ஆனா, மருத்துவர்கள் பரிந்துரை செஞ்சா மட்டுமே வாங்க முடியுமாம். மிடில் ஏஜ் மக்களோட ஒரு பெரிய கண் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கப்போகுது!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Apollo children hospital: 6000 திறந்த இதய அறுவை சிகிச்சைகள், 10,000 துளையிடும் இதய சிகிச்சை!

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, குழந்தைகளுக்கான 6000 திறந்த இதய அறுவை சிகிச்சைகளையும், குழந்தைகளுக்கான 10,000 துளையிடும் இதய சிகிச்சை நடைமுறைகளையும் வெற்றிகரமாகச் செய்துள்ளது!சென்னை, ஆகஸ்ட் 6, 2025: இ... மேலும் பார்க்க

World Breast Feeding Week: சீம்பால் முதல் தாய்ப்பால் அருந்துகையில் குழந்தையின் மூக்கு பொசிஷன் வரை!

தாய்மை அடைந்திருக்கும் அம்மாக்களுக்கும், தாய்ப்பால் ஊட்டும் அம்மாக்களுக்கும் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் மீனா பிரகாஷ், குழந்தைகள் நல மருத்துவர் தனசேகர் கேசவலு மற்றும் பிரசவகால, தாய்ப்பால் அற... மேலும் பார்க்க

பசியே இல்லையா; இந்த 10 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

''அதிகம் பசிப்பது எப்படிப் பிரச்னைக்குரிய விஷயமோ, பசியே இல்லாதது அதைவிடவும் பெரிய பிரச்னை. உடல், மன நல மாற்றங்களின் காரணமாகப் பசியின்மை ஏற்படுகிறது. ஒரு வாரத்துக்கும் மேல் பசியின்மை தொடர்ந்தால், அது ந... மேலும் பார்க்க

Doctor Vikatan: சித்த மருத்துவம் பரிந்துரைக்கும் கற்பூராதி தைலம்; எல்லோரும் பயன்படுத்தலாமா?!

Doctor Vikatan:குழந்தைகளுக்கு சளி, மூச்சுத்திணறல் ஏற்படும்போது கற்பூரம் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள். ஆனால், சித்த மருத்துவத்தில் கற்பூராதி தைலம் பயன்பாட்டில் இரு... மேலும் பார்க்க

Vitamin D : `வெயிலில் காய்ந்த உப்பில் வைட்டமின் டி இருக்குமா?' - வைட்டமின் டி குறித்த முழு தகவல்கள்

உங்கள் ஆயுள் அதிகரிக்க வேண்டுமென்றால், உங்கள் உடலில் வைட்டமின் டி மிக மிக அவசியம். அதனால்தான், அந்தக் காலத்தில் 'சூரிய ஒளி புகாத வீட்டுக்குள் வைத்தியர் அடிக்கடி புகுவார்' என்பார்கள். அதாவது, சூரிய ஒளி... மேலும் பார்க்க

Apollo: ‘எண்டு-ஓ செக்’-ஐ அறிமுகம் செய்த அப்போலோ!

பெண்களுக்கு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தின் மீது அர்ப்பணிப்புடன் செயல்படும் அப்போலோ கேன்சர் சென்டர் (ACC) மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) எண்டு-ஓ செக் (End-O Check) எ... மேலும் பார்க்க