செய்திகள் :

Private Bus: 'சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பஸ்?' - மக்கள் விரோத முடிவை எடுக்கிறதா அரசு?

post image
சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சென்னையில் போக்குவரத்து வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை அனுமதிப்பது சார்ந்து இருவேறு கருத்துகள் எப்போதுமே இருக்கிறது. குறிப்பாக, மினி பேருந்துகளை அனுமதிப்பதன் மூலம் போக்குவரத்தை தனியார்மயப்படுத்தும் வேலைகளில் தமிழக அரசு இறங்கியிருப்பதாக கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
MK Stalin

இதுதொடர்பாக சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் சௌந்தர்ராஜனிடன் பேசினேன். அவர் பேசுகையில், ''20 வருடங்களுக்கு முன்பாக கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதே தனியார் மினிபஸ் விடும் திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது கடைசி மைல் வரைக்குமான போக்குவரத்து தொடர்பை உறுதி செய்யவே மினிபஸ்களை அனுமதிக்கிறோம் என்றனர். அரசாலயே இதை செய்ய முடியும் என்றே அன்றும் சொன்னோம். இன்றும் சொல்கிறோம். அரசுப் பேருந்துகள் இயங்கும் வழித்தடத்தில் வெறும் 1 கி.மீ அளவுக்குதான் மினி பேருந்துகள் இயங்கும். மற்ற எல்லா வழித்தடங்களும் அரசு பேருந்துகளால் கவர் செய்யப்படாத இடங்களாகவே இருக்கும் என்றனர். ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை.

தனியார் பேருந்துகள் நிறைய தில்லு முல்லுகளை செய்தனர். தனியார் முதலாளிகளுக்கு அவர்கள் எதிர்பார்த்த லாபமும் கிடைக்கவில்லை. அதனால் பல இடங்களின் வாங்கிய பெர்மிட்களை மீண்டும் ஒப்படைத்துவிட்டனர். அப்போதே முறையாக செய்யப்படாத விஷயத்தை இப்போது மீண்டும் செய்கிறார்கள். இதை ஊர்ந்து ஊர்ந்து தனியார்மயத்தை நோக்கி முன்னேறும் முயற்சி என்று கூட சொல்லலாம். தனியார் முதலாளிகளின் அழுத்தத்தின் பேரிலேயே தமிழக அரசு இப்படியொரு முடிவை எடுக்கிறது. கடந்த ஆண்டு இதற்காக கருத்துக் கேட்புக் கூட்டங்களெல்லாம் நடந்திருந்தது. அதிலும் எங்களின் எதிர் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தோம். ஆனால், அதையெல்லாம் அவர்கள் கேட்கவே இல்லை. போக்குவரத்துத்துறை சார்ந்த பொருளாதார சிக்கல்களெல்லாம் அரசே உருவாக்கிக் கொண்டதுதான்.

சௌந்திரராஜன்

குறைவான மக்கள் தொகை கொண்ட இடங்களுக்கும் போக்குவரத்து சேவையை வழங்குவதும் அரசின் கடமைதான். நஷ்டம் வருகிற இடத்தில் தனியார் முதலாளிகள் முதலீடு செய்யமாட்டார்கள். நஷ்டம் வருகிற இடத்திலும் அரசுதான் மக்களுக்காக போக்குவரத்து சேவையை இயக்கியாக வேண்டும். நகர்ப்பகுதிகளில் மக்களின் அதிகப்படியான நெருக்கடிதானே பல சூழல் பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. ஆக, மக்கள் புறநகர் பகுதிகளை நோக்கி செல்ல வேண்டுமெனில் அதற்கான பொறுப்பை அரசுதான் ஏற்க வேண்டும். அவர்களின் வசதிக்காக நஷ்டம் ஏற்பட்டாலும் அரசுதான் பேருந்துகளை இயக்க வேண்டும். உலகில் எங்குமே நகர்ப்புற பேருந்துகள் லாபத்தில் இயங்கவில்லை. ஆனாலும் பேருந்துகளை இயக்க வேண்டியது அரசின் சமூகக் கடமை.

அரசு நஷ்டத்தை சந்தித்தாலும் அதன் மூலம் சமூகம் பெறுகிற நன்மையைத்தான் பார்க்க வேண்டும். குழந்தைகள் பாஸ் மூலம் பயணம் செய்கிறார்கள். பெண்கள் இலவசமாக பயணம் செய்கிறார்கள். இதனால் ஒரு சமூகமாக நாம் நிறையவே உயர்கிறோம். மத்திய அரசு பின்பற்றிய தாராளமய தனியார்மய கொள்கைகளை மாநில அரசும் பின்பற்றுவது கடும் கண்டனத்துக்குரியது. பிப்ரவரி முதல் வாரத்தில் மினி பேருந்து சேவைகள் தொடங்கும் என்கிறார்கள். இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. இவ்வளவு குறுகியகால இடைவெளியில் தடாலடியாக செய்வதே எதிர்ப்புக்குரல்களை அடக்குவதற்குதான். இந்த மக்கள் விரோதப் போக்கை அரசு கைவிட வேண்டும்.' என்றார்.

'மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதாகக் கூறி தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.' என பாமக தலைவர் அன்புமணியும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தனியார் மினிபஸ்கள் அனுமதி மீதான விமர்சனங்கள் குறித்த கேள்விகளுடன் திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினேன். ''போக்குவரத்துத்துறை அமைச்சர் இன்னும் எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையே. அப்படியே இருந்தாலும் போக்குவரத்து சேவை அதிகமாக தேவைப்படுகிற புறநகர் பகுதிகளில் மட்டும்தான் மினி பஸ்களை இயக்குவார்கள்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

1974 இல் இந்தியாவில் முதல் மாநிலமாக பேருந்துகளை நாட்டுடமையாக்கியது கலைஞர் அரசுதான். அவரின் மகன் தலைமையில் நடக்கும் ஆட்சியில் எப்படி தனியார்மயத்தை அனுமதிப்பார்கள்? போக்குவரத்துத்துறை ஊழியர்கள் மற்றும் சங்கங்களின் ஐயத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஒருபோதும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எக்காரணத்தை கொண்டும் போக்குவரத்தை தனியாரிடம் தாரைவார்த்துவிடமாட்டார். தேவைகளை பொறுத்து ஒரு சில இடங்களில் மட்டுமே தனியார் மினி பஸ்கள் அனுமதிக்கப்படும்.' என்றார்.

ஒரு சில இடங்கள் தான் என்று சொன்னாலும், நாளடைவில் தனியார் பேருந்துகள் தான் அரசு பேருந்து வழித்தடங்களில் அதிகமாக செல்லும் நிலை ஏற்படும். பின்னர், `வருவாய் இல்லை என அரசு பேருந்துகள் நிறுத்தப்படலாம். அப்போது இலவச பஸ் பாஸும் செல்லாது, மகளிருக்கான இலவச பயணமும் வாய்ப்பில்லாமல் போகும் என்பதே பெரும்பான்மை மக்களின் கவலையாக உள்ளது.!

மதுரை: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து! - மத்திய அரசு

மதுரையில் அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு விடுத்த ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏலம் விடப்பட்ட நாள்முதல், டங்ஸ்டன... மேலும் பார்க்க

Two-gender policy: `இது ஒன்றும் நோயல்ல மிஸ்டர் ட்ரம்ப்..!’ - பாலினம் குறித்து ஏன் இப்படி ஒரு முடிவு?

ிறம் Gender Identity "பாலின அடையாளம்" என்ற சொல் முதன்முதலில் 1960-களில் தோன்றியது. ஆணாகவோ, அல்லது பெண்ணாகவோ சமூகத்தால் வகைப்படுத்தப்பட்ட நபர், தன் உள்ளுணர்வின் அடிப்படையில், தன்னை யாராகக் கருதுகிறார் ... மேலும் பார்க்க

Union Budget: "வரி பயங்கரவாதம்... பாதிக்கும் நடுத்தர வர்க்கம்" - கெஜ்ரிவாலின் 7 பரிந்துரைகள் என்ன?

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. மறுபக்கம், டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இந்த நில... மேலும் பார்க்க

``அப்போது ரெய்டுக்கு பயந்து பதுங்கியிருந்தாரா பழனிசாமி?" - ஐ.பெரியசாமி

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள்களாகவும், 300 ரூபாய் ஊதியம் உயர்த்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்து நிறைவேற்றவில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் அ... மேலும் பார்க்க

Stalin : 'இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்படும்!' - ஸ்டாலின் சொல்வதென்ன?

கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இரும்பின் தொன்மை நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மேலும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல... மேலும் பார்க்க