செய்திகள் :

Rachel Gupta: ``நேர்மை, சுயமரியாதைக்காக.." - உலக அழகிப் பட்டத்தை துறந்த ரேச்சல் குப்தா சொல்வதென்ன?

post image

ரேச்சல் குப்தா (Rachel Gupta), பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்தவர். 2022-ம் ஆண்டு 'Miss Super Talent of the World' பட்டத்தை வென்ற இவர், 2024 அக்டோபர் 25-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற உலக அழகிப்போட்டில் முதல் இடத்தைப் பிடித்தார்.

இதன் மூலம் இந்தியாவின் முதல் 'Miss Grand India' பட்டத்தை வெற்றவர் என்றப் பெருமையைப் பெற்றார். இந்தியாவின் லாரா தத்தாவிற்குப் பிறகு (Lara Dutta), உலகளாவிய அழகிப் போட்டிகளில் அதிக கிரீடங்களை வென்ற இந்திய அழகி ரேச்சல் குப்தாதான்.

ரேச்சல் குப்தா
ரேச்சல் குப்தா

இந்த நிலையில், கடந்த மே 28-ம் தேதி, ரேச்சல் குப்தா தனது Miss Grand India பட்டத்தை துறந்தார். இதனால் ரேச்சக் குப்தாவுக்குப் பிறகான இடத்தைப் பிடித்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சிஜே ஓபியாசா (CJ Opiaza)வுக்கு 'Miss Grand India 2024' பட்டம் வழங்கப்பட்டது.

இதற்கிடையில் ரேச்சல் குப்தா தன் யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``கடந்த 7 மாதங்களாக நான் கொடுமையான அனுபவங்களை சந்திச்சிட்டு இருந்தேன். Miss Grand India வெற்றிக்குப் பிறகு 1 மாதம் ஒரு ஹோட்டல் அறையில் அடைத்து வைக்கப்பட்டேன். அவர்களுக்கு எப்போதும் எனது உடல் எடை குறித்த கவலை மட்டுமே இருந்தது. வெளிப்படையா சொல்லனும்னா நான் உயிரோட இருக்கேனா இறந்துவிட்டேனானு கூட அவங்களுக்கு கவலை இல்ல.

ரேச்சல் குப்தா
ரேச்சல் குப்தா

மேடையில் நான் சிரித்துக்கொண்டே கையை அசைக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களின் தேவை. அதற்காக அவர்கள் விரும்புற மாதிரி என் உடம்பை ரொம்ப ஸ்லிம்லா வச்சுக்ககணும்னுதான் விரும்புறாங்க. டிக்டாக் நேரலையில போய் அவங்க சொல்ற பொருள்களை விற்பனை செய்து பணம் சம்பாதிச்சு, அவங்களோட நிகழ்வுகளில் கலந்துக்கணும். அவ்வளவுதான், என்னிடமிருந்து அவங்களுக்கு வேணும். அவங்க என்னை ஒருபோதும் ஆதரிக்க மாட்டாங்கன்னு எனக்குப் புரிஞ்சுது.

டிக்டாக்ல மலிவான பொருள்களை விற்க வச்சிருக்காங்க. அதே நேரம் உடல்நலம், உடற்தகுதியைக் கவனித்துக் கொள்வற்கும் கடுமையாகப் போராடினேன். நான் அவங்ககிட்ட ஜிம்முக்கு போகணும்னு கேட்டேன். ஆனா அவங்க எனக்கு அதுக்கு ஏற்பாடு பண்ணல. எனக்கு ஒரு யோகா ட்ரைனரையாவது கொடுங்கன்னு நான் கெஞ்சிக்கிட்டே இருக்க வேண்டியிருந்தது.

அதே சமயம், என் உடல் எடை பத்தி எப்பவும் பேசிக்கிட்டே இருந்தாங்க. ஒரு தடவை என் எடையை சோதிக்க ஒருத்தவர் வந்தார். அவர் என்னைப் பல இடத்துல கிள்ள ஆரம்பிச்சு, 'நீ இங்க எடையைக் குறைக்கணும், இங்க எடையைக் குறைக்கணும்'ன்னு சொல்றான். இது ரொம்ப சங்கடமா இருக்கு.

இதெல்லாம் என் மனஉறுதிக்கு பெரும் சவாலா இருந்துச்சு. இவ்வளவு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசுவதற்கு நிறைய தைரியம் தேவை. குறைந்தபட்சம் நான் எனக்காகவாவது இருக்க வேண்டும்.

ரேச்சல் குப்தா
ரேச்சல் குப்தா

நாம நல்லா மதிக்கப்படுறோம். ஆனால் இங்கு என்னைப் போல கனவு காணும் பெண்களுக்கு உதவும் என்பதால்தான் பகிர்கிறேன்.

எனவே, முக்கியமான பிரச்னைகளில் கவனம் செலுத்துமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் ரசீதுகள் என்னிடம் உள்ளன. ஆனால் அந்த அளவுக்குச் செல்லத் தயாராக இல்லை. ஒரு இலக்கை அடைய மிகவும் கடினமாகப் போராடிப் பெற்ற ஒன்றை திருப்பித் தருவது எளிதல்ல. என் பதவி விலகல் முடிவு நேர்மை, சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டது. நான் சொல்வதைக் கேட்டு எனக்கு ஆதரவளித்ததற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Makeup: ஆள் அடையாளம் தெரியாமல் திணறிய ஃபேஸ் ஸ்கேனர்: கண்டித்த விமான நிலைய அதிகாரி; நடந்தது என்ன?

ஒரு காலத்தில் மேக்கப் தேவை இல்லை இயற்கை அழகே அழகு எனப் பேசப்பட்டது. ஆனால், கால ஓட்டத்தில் மேக்கப் என்பது என் தனி உரிமை. அதை நான் விரும்பும் வகையில் போட்டுக்கொள்ளும் உரிமை எனக்கு இருக்கிறது என உரிமைக் ... மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ஜன்னல் வழியே ரூபாய் நோட்டு கட்டுகளை வீசிய அதிகாரி - என்ன நடந்தது?

ஒடிசா மாநில ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் பைகுந்த நாத் சாரங்கி. இவர் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டுவருவதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அதனால... மேலும் பார்க்க

சுற்றுலா சென்ற தம்பதி: திடீரென இறந்த மனைவி; `இதயம் காணவில்லை எனப் புகார்' - என்ன சொல்கிறது துருக்கி?

இங்கிலாந்திலிருந்து துருக்கிக்கு பெத் மார்ட்டின் - லூக் மார்ட்டின் தம்பதி விமானத்தில் சுற்றுலா புறப்பட்டிருக்கிறார்கள். அப்போதே பெத் மார்ட்டினுக்கு உடல்நலமில்லாமல் இருந்திருக்கிறது. ஃபுட் பாயிசன் ஆகிய... மேலும் பார்க்க

``அவன் மீண்டும் உயிர்வாழும் வாய்ப்பு இல்லாமலே போய்விடும்" - இறந்த மகனுக்காக நிதி திரட்டும் நடிகை!

ஆஸ்திரேலிய நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல்வேறு துறைகளில் இயங்குபவர் கிளேர் மெக்கான் (Clare McCann). இவருக்கு 13 வயதில் அட்ரேயு என்ற மகன் இருந்தார். இவர் பள்ளிக்குச் சென்று வந்துகொண்டிருந்த நில... மேலும் பார்க்க

`Porn Addicts-ஆ?’ - `தி நியூயார்க் டைம்ஸ்' எதிராக பழங்குடியினர் - என்ன நடந்தது?

பிரேசிலின் அமேசான் பகுதியைச் சேர்ந்தவர்கள் மருபோ பழங்குடியினர். இவர்கள் ஸ்டார்லிங்க் மூலம் ஒன்பது மாதங்களுக்கு முன்பு இணைய வசதியைப் பெற்றிருக்கின்றனர்.இணைய வசதியைப் பெற்ற பழங்குடியினர் இணையச் சேவையைப்... மேலும் பார்க்க

France: மனைவியால் தாக்கப்பட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்? - வியட்நாமில் நடந்தது என்ன?

ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் அவரது மனைவி பிரிஜிட் மக்ரோனும் விமானத்தில் இருந்து இறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. ஃபிரான்ஸ் ஜனாதிபதியும், அவரின் மனைவியும் வியாட்னாம் சுற்... மேலும் பார்க்க