செய்திகள் :

Rajini: "என் அன்பு நண்பர்; நமது சூப்பர் ஸ்டார்" - ரஜினியை வாழ்த்திய கமல்

post image

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `கூலி' திரைப்படம் திரையரங்குகளில் நாளை வெளியாகிறது.

தமிழ்நாடு, தென்னிந்தியா, இந்தியா கடந்து உலக அளவில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது கூலி.

ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி
ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி

அதுமட்டுமல்லாமல், ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்கள் (ஆகஸ்ட் 15, 1975) திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடையும் நாளில் கூலி திரைப்படம் வெளியாவதால், ரஜினியின் 50 ஆண்டுக்கால திரைப்பயணத்தையும் சேர்த்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது கூலி.

இந்த நிலையில், ரஜினியின் 50 ஆண்டு திரைப்பயணத்துக்கு அவரது நண்பரும், நடிகரும், எம்.பி-யுமான கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கமல், "சினிமாவில் அரை நூற்றாண்டு கால திறமையைக் குறிக்கும் வகையில், என் அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்று சினிமாவில் 50 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்.

நமது சூப்பர் ஸ்டாரை அன்புடனும், பாராட்டுடனும் கொண்டாடுகிறேன்.

இந்தப் பொன் விழாவிற்கு ஏற்றவாறு கூலி உலகளாவிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

அதேபோல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், "கூலி படம் எனது திரைப் பயணத்தில் எப்போதும் ஸ்பெஷலான படம். அதற்கு ஒரே காரணம் நீங்கள்தான்.

உங்களுடன் படப்பிடிப்பில் மற்றும் வெளியில் பகிர்ந்த உரையாடல்கள், இந்த வாய்ப்பு எல்லாம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள். We Love You Thalaivaa" என நன்றியும், வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.

Coolie: ``படத்திற்கான வரவேற்பைத் தெரிந்துக்கொள்ள ரஜினியும் ஆர்வமாக இருக்கிறார்' - லதா ரஜினிகாந்த்

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் இன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், ... மேலும் பார்க்க

Rajinikanth 50: ``50 ஆண்டுகால ஸ்டைல், தன்னம்பிக்கை, மாஸ்" இயக்குநர்கள் கொண்டாடும் நடிகர் ரஜினி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் கூலி திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களின் பெரும் எ... மேலும் பார்க்க

Rajinikanth 50: நடிகர்கள் சூர்யா, சிம்பு முதல் சூரி வரை - ரஜினிக்கு குவியும் வாழ்த்துகள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் கூலி திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களின் பெரும் எ... மேலும் பார்க்க

Coolie: `கூலி LCU படமா, தனி படமா?' - லோகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `கூலி' நாளை (ஆகஸ்ட் 14) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இப்படத்தில், சத்யராஜ், நாகர்ஜுனா, அமீர் கான், சௌபின், உபேந்திரா, ஸ்ருதிஹா... மேலும் பார்க்க

Coolie: 'உதவி இயக்குநர் டு டாப் நடிகர்' - ஆசான் கொடுத்த சினிமா வாய்ப்பு; நிரூபித்த செளபின் சாஹிர்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'கூலி' திரைப்படம் நாளை வெளியாகிறது. மலையாள நடிகர் செளபின் சாஹிரை தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவர தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் பலரும் முயற்சித்தார்கள். அதனை தற்போது இ... மேலும் பார்க்க

Coolie: எங்கும் 'கூலி' ரிலீஸ் கொண்டாட்டம்!; கேஸுவலாக பெங்களூரு ரோடு டிரிப் போன ரஜினி!

ரஜினி படம் ரிலீஸ் என்றால் அன்றுதான் ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் திருவிழா எல்லாமே நடக்கும். ரஜினி இரண்டு வருஷத்துக்கு ஒருமுறை ஒரு படம் என நடித்த காலங்கள் உண்டு. அப்போது எல்லாம் வருகிற தீபாவளி, பொங்க... மேலும் பார்க்க