செய்திகள் :

"RCB ஃபைனலில் வெல்ல வேண்டுமென்றால், இந்த அணியை தடுத்தாக வேண்டும்!" - CSK வீரர் அஸ்வின் சொல்வதென்ன?

post image

ஐபிஎல்-லில் 17 சீசன்களாக சாம்பியன் பட்டம் வெல்லாத, அதேசமயம் அதிக ரசிகர்கள் ஆதரவு கொண்ட ஒரே அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி.

2009, 2011, 2016 ஆகிய சீசன்களில் மூன்று விதமான கேப்டன்கள் தலைமையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் பெங்களூரு அணியால் கோப்பை வெல்ல முடியாமல் போனது.

இதனால், வழக்கம்போல இந்த சீசனில் கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கில் புதிய கேப்டன் ரஜத் பட்டிதார் தலைமையில் களமிறங்கியது ஆர்.சி.பி.

RCB
RCB

அதோடு, கோலியின் ஜெர்ஸி நம்பரும், இந்த சீசன் நம்பரும் 18 என்பதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றனர்.

அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் இதுவரை எந்தவொரு ஏமாற்றமும் தராமல் நிறைவேற்றிவரும் பெங்களூரு அணி, குவாலிஃபயர் 1-ல் பஞ்சாப் அணியை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து கோப்பைக்கு ஓரடி தூரத்தில் நிற்கிறது.

இந்த நிலையில், ஆர்.சி.பி அணி கோப்பை வெல்ல வேண்டுமென்றால் எப்படியாவது மும்பை அணியை இறுதிப்போட்டிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்று சி.எஸ்.கே வீரர் அஸ்வின் கூறியிருக்கிறார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "ஆர்.சி.பி அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டுமென்றால், மும்பை அணியை குஜராத் அணி (எலிமினேட்டர் போட்டியில்) வெல்ல வேண்டும்.

மும்பை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைவதை எப்படியாவது தடுக்க வேண்டும். இறுதிப்போட்டிக்கு மும்பை வரக்கூடாது என்று பெங்களூரு பிரார்த்தனை செய்யும்.

ஆனால், இது கிரிக்கெட். இதில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இப்போது நான் ஆர்.சி.பி அணியாக இருந்தால், இறுதிப்போட்டியில் குஜராத்தை எதிர்கொள்ள விரும்புவேன்" எனக் கூறினார்.

அஸ்வின்
அஸ்வின்

மேலும், விராட் கோலி குறித்து பேசுகையில், "விராட் கோலிக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இந்த சீசன் ஆர்.சி.பி-க்கானது என்று உணர்கிறேன்.

பொதுவாக கோலியிடம் ஐ.சி.சி கோப்பைகள் இல்லை என்று கூறுவார்கள். ஆனால், கடந்த ஓராண்டு காலத்தில் இரண்டு ஐ.சி.சி கோப்பைகளை (டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) வென்றிருக்கிறார்.

விராட் கோலி
விராட் கோலி

அது கேப்டனாக இல்லையென்றாலும், வெற்றியின் மையமாக இன்றும் அவர் இருக்கிறார். கோலியும் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன்களில் ஒருவர்.

ஆர்.சி.பி-யின் முதல் கோப்பையை 18-வது சீசனில் அவர் வெல்லப்போகிறாரா?

ஒருவேளை இறுதிப்போட்டியில் சேசிங் என்றால் அந்த சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது கோலிக்குத் தெரியும்" என்று அஸ்வின் கூறினார்.

Maxwell: ``அணியை ஏமாற்றுவதுபோல் உணர்ந்தேன்'' - ODI போட்டியிலிருந்து விடைபெற்றார் உலகக் கோப்பை நாயகன்

சமகால கிரிக்கெட்டில் ஓயிட் பால் ஃபார்மெட்டில் எந்த நேரத்திலும் வெற்றியைத் தன்வசப்படுத்தக்கூடிய ஒரு அசாத்திய வீரர் ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல்.2023 ஒருநாள் உலகக் கோப்பையில், ஆப்கானிஸ்தானுடன் லீக்... மேலும் பார்க்க

Shreyas Iyer : `ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் இல்லை; தலைவன்!' - ஏன் தெரியுமா?

'பஞ்சாபின் வரலாற்றை மாற்றிய ஸ்ரேயாஸ்!'11 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. அந்த அணியின் நீண்ட நாள் ஏக்கத்தை, கனவை ஸ்ரேயாஸ் ஐயர் தீர்த்திருக்கிறார். பெரு வெற்றி... மேலும் பார்க்க

Mumbai Indians: "அப்படிச் செய்திருந்தால் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும்" - ஹர்திக் சொல்வதென்ன?

அகமதாபாத் மைதானத்தில் ஸ்ரேயஸ் தலைமையிலான பஞ்சாப் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியும் இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான குவாலியர் 2-ல் நேற்று (ஜூன் 1) மோதின.டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ர... மேலும் பார்க்க

RCB : 2009, 2011, 2016 பைனல்ஸில் செய்த தவறுகள் என்ன? சாதனை படைக்குமா RCB; பலம், பலவீனம் என்ன?

நடப்பு ஐ.பி.எல் சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல 4-வது முறையாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது.அதற்கேற்றவாறு முன்னெப்போதும... மேலும் பார்க்க

PBKS vs MI: 'மும்பைக்குத் தோல்வியைத் தந்த 3 முடிவுகள்!'- இறுதிப்போட்டிக்கு எப்படி சென்றது பஞ்சாப்?

'பஞ்சாப் வெற்றி!'தலைவனாக முன் நின்று பஞ்சாபை வழிநடத்தி சிறப்பாக ஆடி இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஸ்ரேயஸ் ஐயர். ப்ளே ஆப்ஸ் போட்டிகளில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்த மும்பை அணி சின்னச... மேலும் பார்க்க

IPL Playoffs: 'அகமதாபாத்தில் மழை; ஆட்டம் என்னவாகும்?' -விதிகள் என்ன சொல்கிறது?

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டி அஹமதாபாத்தில் நடந்து வருகிறது. போட்டிக்கான டாஸ் மட்டுமே போடப்பட்டிருக்கும் நிலையில் அஹமதாபாத்தில் மழை பெய்து... மேலும் பார்க்க