செய்திகள் :

RCB stampede: "மிகவும் சந்தோஷமான தருணம் துக்கமானதாக மாறிவிட்டது" - கோலி உருக்கம்

post image

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஒரு வழியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த சீசனில் கோப்பையை வென்றது.

ஆனால், ஆர்.சி.பி ரசிகர்களுக்கு அந்த சந்தோஷம் முழுதாக ஒருநாள் கூட நீடிக்கவில்லை.

ஜூன் 3-ம் தேதி ஆர்.சி.பி கோப்பை வெல்ல, அவசர அவசரமாக அடுத்த நாளே 32,000 இருக்கைகள் அளவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டம் அறிவிப்பு வெளியானது. இதனால், ஜூன் 4-ம் தேதி எதிர்பாராதவிதமாக ஸ்டேடியத்துக்கு வெளியே லட்சக் கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர்.

RCB
RCB

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் சிக்கி உயிரிழந்தனர். ஒரே நாளில் ஆர்.சி.பி-யின் கொண்டாட்டம் துக்கத்தில் மூழ்கியது.

இந்த நிலையில், ஆர்.சி.பி வீரர் விராட் கோலி அந்த சம்பவம் குறித்து, "ஜூன் 4-ம் தேதி போன்ற ஒரு துயரத்திற்கு வாழ்க்கையில் எதுவும் உங்களைத் தயார்படுத்தாது.

நம் அணியின் வரலாற்றில் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்க வேண்டியது, துக்கம் நிறைந்ததாக மாறியது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்த ரசிகர்களுக்காகவும் தினமும் பிரார்த்தனை செய்து வருகிறேன்.

இந்த இழப்பு எங்கள் கதையின் ஒரு அங்கமாகிவிட்டது. அக்கறையுடனும், மரியாதையுடனும், பொறுப்புடனும் ஒன்றாக முன்னேறுவோம்" என்று உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

கோலியின் இந்த செய்தியை அணி நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.

``ரசிகர் போரா? PR லாபியா?'' – தோனி குறித்த எதிர்மறை வீடியோ பரவலுக்கு இர்ஃபான் பாதானின் பதில்!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பாதான் 2020ஆம் ஆண்டு அளித்த நேர்காணல் குறித்து தற்போது விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எம். எஸ். தோனி குறித்து பேசிய அவரது ... மேலும் பார்க்க

"தோனிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்; அவரைப்போல..." - பாக்., மகளிர் அணி கேப்டன் ஓபன்

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நவம்பர் 2-ம் தேதி வரை நடைபெறும்.நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,... மேலும் பார்க்க

IPL-ல் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர்; 25 வருட கரியரை முடித்துக் கொண்ட இந்திய சாம்பியன்!

ஐபிஎல்-லில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரரான அமித் மிஸ்ரா, அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார்.சுழற்பந்துவீச்சாளரான இவர் 2003-ல் வங்காளதேசம், தென்னாப்பிரிக்க... மேலும் பார்க்க

"நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும்..." - இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடும் புவனேஷ்வர்

இந்திய அணியில் ரெட் பால், ஒயிட் பால் என இரண்டிலும் சிறந்த ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார்.கடை... மேலும் பார்க்க

"பேட் கம்மின்ஸ் அப்படி செய்வாரா?" - பும்ரா மீதான பணிச்சுமை விவாதத்தில் இந்திய முன்னாள் வீரர் கேள்வி

கிரிக்கெட் உலகில் தற்போது நம்பர் ஒன் பவுலராக விளங்குபவர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா.தனது தனித்துவமான பவுலிங் ஸ்டைலால் பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கும் பும்ராவுக்கு, அந்த பவுலிங் ஸ்டைலே ஆபத்... மேலும் பார்க்க

Mitchell Starc: ``இதுவே சிறந்த வழி'' - சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்த மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் இதுவரை 65 T20 போட்டிகளில் வி... மேலும் பார்க்க