Retro: "அன்புள்ள சசி, சிம்ரன், நானி, அஜய் தேவ்கன்..." - மே 1 வெளியாகும் படங்களுக்கு சூர்யா வாழ்த்து!
சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கும் 'ரெட்ரோ' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியாகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் ப்ரோமோஷனுக்காக நேற்று வரை 'ரெட்ரோ' குழுவினர் ஹைதராபாத், கேரளா, மும்பை எனச் சுற்றி வந்தனர்.
இப்படியான பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்வுகளில் பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
'ரெட்ரோ' திரைப்படத்தோடு சசிகுமாரின் 'டூரிஸ்ட் ஃபேமிலி', நானியின் 'ஹிட் 3', அஜய் தேவ்கனின் 'ரைடு 2' ஆகிய திரைப்படங்களும் வெளியாகின்றன.
தன்னுடைய திரைப்படத்துடன் வெளியாகும் இந்த திரைப்படங்களுக்கும் நடிகர் சூர்யா வாழ்த்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், "அன்புள்ள சசி, சிம்ரன், நானி, அஜய் தேவ்கன் சார் மற்றும் 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'ஹிட் 3', 'ரைடு 2' ஆகிய திரைப்படங்களின் அத்தனை குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Dearest Sasi & Simran, Nani, Ajay sir & Riteish, all the cast & crew of #TouristFamily#HIT3#Raid2 Wishing you the bestest!#Anbannafans Lots of love and respect for your support for #Retro... May each of our films be a success & entertain the audience in theatres tomorrow.
— Suriya Sivakumar (@Suriya_offl) April 30, 2025
'ரெட்ரோ' படத்திற்கு அன்பான ரசிகர்கள் கொடுக்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நம்முடைய இந்த ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி பெறட்டும்.
நாளை திரையரங்குகளில் உங்களை எண்டர்டெயின் செய்யட்டும்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...