செய்திகள் :

Salary: 47% இந்திய பணியாளர்கள் ஊதிய உயர்வில் அதிருப்தி..! - ஆய்வு முடிவு சொல்வதென்ன?

post image

இந்தியாவின் தொழில்துறையில் பணியாற்றும் 47% பணியாளர்கள் அவர்களது ஊதிய உயர்வு குறித்து அதிருப்தியுடன் இருக்கின்றனர். மேலும் 25% பேர் குறைவான ஊதிய உயர்வு பெற்றாலும் அது மிகப் பெரிய கவலை இல்லை என்ற மனநிலையில் உள்ளனர் என வேலைவாய்ப்பு தளமான foundit (முன்னர் Monster APAC & ME) நடத்திய ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Foundit

46% பேர் மட்டுமே தங்கள் வருமானம் சராசரியை விட அதிகம் என நினைக்கின்றனர். 40% பேர் தங்கள் தொழில்துறையின் சராசரியை விட குறைவாகவே சம்பளம் பெறுவதாக நினைக்கின்றனர். 14% பேர் தங்களது சம்பள அளவு குறித்து விழிப்புணர்வற்ற நிலையிலேயே இருக்கின்றனர்.

எந்த தொழில்துறையிலும் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க சம்பளம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுகிறது. அதேவேளையில் அதிருப்தியும் குறைந்து வருகிறது.

இந்த கணக்கெடுப்பில் வெளியான சில முக்கிய தரவுகளைப் பார்க்கலாம்...

அதிருப்தி அளவு

தொடக்க நிலை (0-3 ஆண்டுகள்)

51% பேர் சம்பள அளவுகோல் குறைத்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.

31% பேர் குறைவான சம்பளம் வாங்குவதாக அதிருப்தியாக உணர்கின்றனர்.

ஜூனியர் நிலை (4-6 ஆண்டுகள்)

தொடக்க நிலையினரை விட குறைவான அதிருப்தியில் இருக்கின்றனர். சம்பளம் குறித்து வெளிப்படையாக இருக்கின்றனர்.

26% பேர் தாங்கள் துறையின் அளவை விட அதிகமாக ஈட்டுவதாக நம்புகின்றனர். குறிப்பாக ஐடி துறையில் இந்த நம்பிக்கை இருக்கிறது.

Senior Employee

நடுநிலை (7-10 ஆண்டுகள்)

அதிருப்தியின் அளவு மேலும் குறைந்திருக்கிறது.

22% பேர் அதிக சம்பளம் வாங்குவதாக நினைக்கின்றனர். ஐடி துறையில் இந்த நம்பிக்கை அதிகம் இருக்கிறது.

மூத்த அதிகாரிகள் (11+ ஆண்டுகள்)

18% பேர் துறையின் அளவை விட அதிகமாக சம்பாதிப்பதாக நம்புகின்றனர்.

சம்பள உயர்வில் திருப்தி

47% பேர் தங்கள் சம்பள உயர்வு குறித்து அதிருப்தியாக இருக்கின்றனர். தொடக்கநிலை பணியாளர்களும் ஐடி பணியாளர்களும் அதிக அதிருப்தியில் இருக்கின்றனர்.

28% பேர் பேர் அதிக திருப்தியுடன் இருக்கின்றனர். குறிப்பாக இஞ்சினியரிங் மற்றும் தயாரிப்பு துறைகளில் பணியாற்றுபவர்கள் 18%, ஐடி துறையில் பணியாற்றுபவர்கள் 14%.

25% பேர் நடுநிலையாக இருக்கின்றனர்.

Employees

ஊதிய உயர்வுக்கான எதிர்பார்ப்பு (Salary High Expectations)

35% பேர் பழைய முறைகளைப் போல குறைவான (0-10%) சம்பள உயர்வைத்தான் எதிர்பார்க்கின்றனர்.

29% பேர் நவீன சம்பள உயர்வுகளின்படி 11-20% சம்பள உயர்வு எதிர்பார்க்கின்றனர்.

14% பேர் நல்ல (21-30%) உயர்வை எதிர்பார்க்கின்றனர்.

22% பேர் அதிகப்படியான (30%+) சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றனர்.

தொடக்கநிலை ஊழியர்களில் 20% பேர் குறைவாக (0-10%) உயர்வும், 11% பேர் அதிகமாகவும் (30%+) எதிர்பார்க்கின்றனர்.

நடுநிலை மற்றும் சீனியர் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் 11-20% ஊதிய உயர்வையே எதிர்பார்க்கின்றனர்.

தொடக்க மற்றும் ஜூனியர் நிலை ஊழியர்களே 30%க்கும் அதிகமான ஊதிய உயர்வை எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளில் நடந்த சம்பள மாற்றங்கள்!

கடந்த 3 ஆண்டுகளில் 59% பேர் குறைவான சம்பள உயர்வையேப் பெற்றிருக்கின்றனர்.

28% பேர் குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வைப் பெற்றுள்ளனர்.

13% பேர் அதிகப்படியான ஊதிய உயர்வைப் பெற்றிருக்கின்றனர்.

77% ஊழியர்கள் எதிர்காலத்தில் சம்பள உயர்வை எதிர்பார்கின்றனர்.!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel