செய்திகள் :

Sandeep Reddy Vanga: ``இளம் நடிகையை வீழ்த்த இதை செய்தீர்களா?"- வைரலாகும் தெலுங்கு இயக்குநரின் பதிவு!

post image

விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி, ரன்பீர் கபூரின் அனிமல் போன்ற படங்களை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இவரின் அடுத்தப்படம் "ஸ்பிரிட்" . இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடிகை தீபிகா படுகோனிடம் பேசப்பட்டு அறிவிக்கப்பட்டது. சில காரணங்களால் தீபிகா படுகோன் இந்தப் படத்திலிருந்து விலகினார். தற்போது அவருக்கு பதிலாக நடிகை த்ரிப்தி டிம்ரி ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Deepika Padukone | தீபிகா படுகோன்

இதற்கிடையில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தன் எக்ஸ் பக்கத்தில், ``நான் ஒரு நடிகரிடம் ஒரு கதையைச் சொல்லும்போது, ​​அவர்மீது 100% நம்பிக்கை வைக்கிறேன். அந்த நடிகருக்கும் எனக்கும் ஒரு சொல்லப்படாத NDA (வெளிப்படுத்தாத ஒப்பந்தம்) உள்ளது. ஆனால் (கதையின் சிலப் பகுதிகளை வெளியில் கூறியதன் மூலம்) நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளீர்கள்... இளம் நடிகையை வீழ்த்துவதற்காக என் கதையை வெளியே கூறினீர்களா? இதுதான் உங்கள் பெண்ணியத்தின் அடையாளமா?

ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக, நான் பல வருட கடின உழைப்பை எனக்கு பின்னால் வைத்திருக்கிறேன். எனக்கு திரைப்படத் தயாரிப்புதான் எல்லாமே. ஆனால் உங்களுக்கு அது கிடைக்கவுமில்லை. எப்போதும் அது கிடைக்காது. அடுத்தமுறையும் இதேப்போல செய்யுங்கள்... வேண்டுமானால் முழு கதையையும் சொல்லுங்கள்... எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை." எனக் குறிப்பிட்டு அதற்கு கீழே ``பூனை தூணைக் கீறுகிறது" என்ற இந்தப் பழமொழி மிகவும் பிடிக்கும்." என எழுதியிருக்கிறார்.

தற்போது இந்த விவகாரம், பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமா வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

kannappa: “எங்க படத்தைத் திருடிட்டு கொடுக்க மாட்றாங்க"- தொலைந்த ஹார்ட் டிஸ்க் குறித்து விஷ்ணு மஞ்சு

மோகன் பாபு தயாரிப்பில் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’. இத்திரைப்படம் வரும் ஜூன் 27ம... மேலும் பார்க்க

Kannappa: காணமல் போன ஹார்டுடிஸ்க்; ஊழியர் தலைமறைவு - புகாரில் சொல்லப்பட்டுள்ளது என்ன?

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் பான் - இந்தியா திரைப்படமான கண்ணப்பா, வெளியாவதற்கு ஒரு மாதமே உள்ள சூழலில் படத்தின் முக்கியமான காட்சிகள் இருந்த ஹார்டு டிஸ்க், தயாரிப்பு நிறுவனமான ட்வென்டி ஃபோர் பிரேம்ஸ் ஃபேக்டர... மேலும் பார்க்க

Tollywood: ``நன்றியுணர்வே இல்லை" - திரைத் துறையை சாடும் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கு தேசக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வராக ஜனசேனா தலைவரும், நடிகருமான பவன் கல... மேலும் பார்க்க

"நடிக்க முடியாவிட்டாலும், திரைப்படங்களை உருவாக்க முடியும் என..." - சொல்கிறார் தயாரிப்பாளர் சமந்தா!

சமந்தா 'சுபம்' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இத்திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தில் சமந்தா ஒரு க... மேலும் பார்க்க

``படித்துக்கொண்டே நடிக்கிறேன்... தெலுங்கு கற்றுவருகிறேன்" - லவ் டுடே நடிகை இவானா

'லவ் டுடே' படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் இவானா. தொடர்ந்து பலத் தமிழ் படங்களில் நடித்துவரும் இவர், தற்போது ஸ்ரீ விஷ்ணு நடித்துள்ள "சிங்கிள்" படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவிருக்கி... மேலும் பார்க்க

Allu Arjun: ``நான் நடிச்சதுல 18 படம் பாக்ஸ் ஆபிஸ்ல..'' - அல்லு அர்ஜுன் ஓப்பன் டாக்

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குநர் அட்லியுடன் இணைந்திருக்கிறார். அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் பெரும் எதிர்ப்... மேலும் பார்க்க