செய்திகள் :

sara: ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கும் 'தெய்வமகள்' சாரா; ஒன்றரை வயதில் ஆரம்பித்த சினிமா பயணம்!

post image

`தெய்வத்திருமகள்’ படத்தில் ‘நிலா வந்தாச்சு’ என எல்லோரையும் கவர்ந்து, ‘சைவம்’ படத்தில்  `அழகு அழகு’ என பாடலால் தமிழ் சினிமாவில் க்யூட் குழந்தை நட்சத்திரமாகப் பிரபலமானவர் சாரா அர்ஜூன். சமீபத்தில் `பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுதவிர 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். இவரது அப்பா ராஜ் அர்ஜுன். பிரபல பாலிவுட் நடிகராவார். சாராவின் ஒன்றரை வயதில், அப்பா ராஜ் அர்ஜுன் - அம்மா தாய் சன்யாவுடன் ஷாப்பிங் மாலுக்கு சென்றிருந்தபோது விளம்பரப்பட இயக்குநர் ஒருவரின் கண்ணில் பட்டிருக்கிறார். அப்படித் தொடங்கியது சாராவின் விளம்பர நடிப்பு. அதைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் இயக்கிய விளம்பரப்படத்திலும் நடித்தார் சாரா.

சாராவின் தமிழ் படங்கள்

டீன் 13 - சாரா அர்ஜுன் - பிக் கேர்ள் ஆனதும் டைரக்ட் பண்ணுவேன்!

அதன்பிறகுதான் தமிழில் அறிமுகமாகி பிரபலமானார். மம்முட்டியுடன் ‘தி கிரேட் ஃபாதர்’ , பாலிவுட்டில் ‘404’  என பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். பெரிய பெண்ணாகி 'இயக்குநராவதுதான் என் கனவு, இப்போவே கதை எழுத ஆரம்பித்துவிட்டேன்' என்றெல்லாம் குழந்தையாக இருக்கும்போதே க்யூட்டாக பேட்டியளித்திருந்தார்.

இப்போது 20 வயதாகிவிட்டது சாராவிற்கு. பாலிவுட் இயக்குநர் ஆதித்ய தார் மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கும் 'Dhurandhar' படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

ரன்வீர் கபூர் படத்தில்....

`குழந்தை நட்சத்திர’ புகழ் சாரா அர்ஜூனுடன் ஜோடி சேரும் ரன்வீர் சிங் - நெட்டிசன் ரியாக்‌ஷன்ஸ்

ரன்வீர் சிங் 40வது பிறந்த நாளான இன்று (ஜூலை 6) இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் ஆர்.மாதவன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் திர்ல்லராக உருவாகியிருக்கும் இப்படம் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

Rajiv Gandhi: "ஒரு நடிகருக்கு இதுபோன்ற வாய்ப்புகள் வருவது ரொம்பவே அரிது!" - பகவதி பெருமாள் பேட்டி!

ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தை மையப்படுத்திய 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' என்ற வெப் சீரிஸ் 'சோனி லிவ்' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. ராஜீவ் காந்தியின் குண்டு வெடிப்ப... மேலும் பார்க்க

Dhanush: "கங்கையிலே ஒரு வண்ணப் பறவை..!" - Tere Ishk Mein படக்குழு ஸ்டில்ஸ் | Photo Album

Dhanush: சூடு பிடிக்கும் 'இட்லி கடை'. மீண்டும் ஒரு இந்திப் படம் - தனுஷ் படங்கள் பரபர அப்டேட்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ... மேலும் பார்க்க

மாஜி கணவரின் ரூ.30,000 கோடி சொத்து... நடிகை கரிஷ்மா கபூருக்கு கிடைக்குமா?

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் கபூர் என்பவரை 2003-ம் ஆண்டு மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டார். இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அத்திருமணம் இருந்தது. பின்... மேலும் பார்க்க

Sai pallavi: ``அம்மா சீதாவின் ஆசிர்வாதத்துடன்.." - `ராமாயணா' குறித்து சாய் பல்லவி போஸ்ட் வைரல்

பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம், 'ராமாயணா - தி இன்ட்ரோடக்‌ஷன்' என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருப்பதாக அப்போதே அறிவித்தி... மேலும் பார்க்க

Ramayana: பாலிவுட்டில் ராமாயணம் திரைப்படம்! - ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி!

பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம், 'ராமாயணா - தி இன்ட்ரோடக்‌ஷன்' என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருப்பதாக அப்போதே அறிவித்தி... மேலும் பார்க்க

ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அபிஷேக் பச்சன் பதிலடி

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிகை ஐஸ்வர்யா ராயைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், இதனால் விவாகரத்து செய... மேலும் பார்க்க