ஐசிசி வெளியிட்ட 2024-ஆம் ஆண்டின் சிறந்த மகளிரணி; ஸ்மிருதி மந்தனாவுக்கு இடம்!
Sehwag : முடிவுக்கு வருகிறதா 20 ஆண்டுக்கால திருமண உறவு? - சேவாக் - ஆர்த்தி தம்பதி பிரிகின்றனரா?!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக்- ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து பெறப் போவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சேவாக் மற்றும் ஆர்த்திக்கு கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சேவாக் - ஆர்த்தி இருவரும் 20 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததாகவும், இதனால் தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் unfollow செய்துகொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி சமீபத்தில் தீபாவளி கொண்டாட்டம் தொடர்பாக சேவாக் பகிர்ந்த குடும்ப போட்டோவில் ஆர்த்தி இல்லை. இந்நிலையில் விரைவில் இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.