18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
Sivakarthikeyan: ``முன்பைவிட இன்னும் அதிகமாக உழைப்பேன்.." - சிவகார்த்திகேயன்
கடந்தாண்டு தீபாவளி பண்டிகை வெளியீடாக சிவகார்த்திகேயன் நடித்திருந்த `அமரன்', அவரின் கரியரில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக ஹிட் அடித்தது.
இப்படம் வெளியாகி 100 நாள்கள் கடந்த நிலையில் கடந்த பிப்., 14-ம் தேதி இத்திரைப்படத்தின் வெற்றி விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றிருந்தது. தனது 25-வது படத்தில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்திருக்கிறார். இந்நிலையில், அவரின் பிறந்த நாளான நேற்று ரசிகர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் சிவகார்த்திகேயனுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தனக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் சிவகார்த்திகேயன், "என்னுடைய பிறந்த நாளில் பேரன்பை வாழ்த்துகளாக தெரிவித்து அதை மறக்கமுடியாத நாளாக மாற்றிய அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி, இணையதள, சமூக ஊடகங்கள், பண்பலை, நண்பர்களுக்கும், அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும், என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.
மதராஸி' படத்தின் முன்னோட்டத்தினை வெளியிட்ட படகுழுவிற்க்கும் அதற்கு அனைவரும் அளித்த பேராதரவிற்கும் நன்றி. தற்போது படப்பிடிப்பில் உள்ள “ பராசக்தி ” படகுழுவின் வாழ்த்துகளுக்கும் அன்பிற்கும் எனது மனமார்ந்த நன்றி.
எனது அன்பு ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பியதோடு, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர முன்பைவிட இன்னும் அதிகமாக உழைப்பேன்." என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Thank you and love you all ❤️ pic.twitter.com/oKko2GQOvo
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 18, 2025
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play