Sivakarthikeyan: "இந்த உடற்பயிற்சி என்னையே எனக்கு அறிமுகப்படுத்தியது..." - சொல்கிறார் எஸ்.கே!
`அமரன்' திரைப்படத்திற்காகப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு ராணுவ வீரர் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போலத் தனது உடலை மாற்றியமைத்திருந்தார் சிவகார்த்திகேயன்.
உடலை மேம்படுத்தும் காணொளி ஒன்றையும் படக்குழு முன்பு வெளியிட்டிருந்தது. தற்போது `அமரன்' திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் எப்படி முழுமையாகத் தயாரானர் என்பதை ஒரு காணொளியாக வெளியிட்டிருக்கிறார் அவரின் பயிற்சியாளர் சந்தீப். இந்தக் காணொளியில் சிவகார்த்திகேயன் எப்படியான சிரமங்களையும், சவால்களையும் மேற்கொண்டார் என்பதை விளக்கியிருக்கிறார்.
இந்தக் காணொளியில் சிவகார்த்திகேயன், ``தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளாத எனக்கு இது மிகவும் கடினமானதாக இருக்குமென்று தெரியும். நான் எந்த விஷயத்தைச் சாதிக்கப் போகிறேன் என்பதைத் தெரிந்து கொள்வதே முதல் புள்ளியாக இருந்தது. என்னுடைய டயட்டை தொடங்கிய பிறகு நான் என்னுடைய ருசிக்காக எதையும் சாப்பிடப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த ப்ராசஸ் எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது. எப்படி என்னுடைய உடலின் நிலைமை இருக்கிறது, என்னுடைய வாழ்க்கை முறை எந்தளவிற்குச் சரியில்லாமல் இருக்கிறது எனக் கற்றுக் கொடுத்தது. இந்த ப்ராசஸ் சுலபமானது என நான் சொல்லமாட்டேன்.

இது மிகவும் சவாலானதாக இருந்தது. இது எனக்கு மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் எனக்குக் கடினமான ஒன்றாக இருந்தது. இப்போது எனக்குப் பயிற்சியாளர் இல்லாமலேயே ஒரு மணி நேரத்திற்கு என்னால் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கிடைத்திருக்கிறது. இந்த பயணம் எனக்குப் பலவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. உங்களின் அன்பு எனக்கு உத்வேகம் கொடுத்திருக்கிறது. நான் இப்போது எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் எப்படியான சவாலாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play