Coolie: ``இந்த மகத்தான மைல்கல்லுக்கான ஒரே ஒருவர் ரஜினி மட்டுமே" - வாழ்த்திய நடிக...
Snakes: விலா எலும்புகளைத் தட்டையாக்கி பறந்து வேட்டையாடும் பாம்புகள் பற்றி தெரியுமா?!
பாம்புகள் படையெடுக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். சில பாம்பு இனங்கள் தண்ணீரில் நீந்துவது, காற்றில் பறப்பது என தனித்துவமான திறன்கள் பெற்றிருப்பதை பற்றிப் பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.
கடல் பாம்புகள் முதல் மரங்களுக்கு இடையே பறக்கும் பாம்புகள் வரை, சில பாம்பு இனங்கள் மட்டும் இவ்வாறு இயற்கையாகவே பண்புகளை கொண்டுள்ளன.
இவற்றின் தனித்துவமான பண்புகள் வேட்டையாடுவதற்கும், வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிப்பதற்கும் உதவுகின்றன. அப்படி பறக்கும், நீந்தும் பாம்புகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

கடல் கிரைட் (Laticauda spp)
அதிக விஷத்தன்மை கொண்ட இந்த வகை பாம்புகள் கடல் சூழலில் வாழ்கின்றன. துடுப்பு போன்ற வால்களைப் பயன்படுத்தி தண்ணீரில் எளிதாக நீந்துகின்றன. இவை பெரும்பாலும் பவளப்பாறைகளில் வாழ்கின்றன, முட்டையிடுவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் மட்டுமே கரையை அடைவதாக தகவல்கள் கூறுகின்றன.
கடல் பவளப்பாம்பு (Aquatic Coral Snake)
கடல் பவளப்பாம்புகள் சிறந்த நீச்சல் திறன்களை கொண்டுள்ளன. இவை பொதுவாக பவளப்பாறைகள் மற்றும் பாறைப் பகுதிகளில் காணப்படுகின்றன. சில கடல் பவளப்பாம்பு இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன.

காட்டன் மவுத் (Water Moccasin)
இந்த விஷமுள்ள பாம்பு, அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்கள், ஏரிகள், ஆறுகளில் காணப்படுகின்றன. இவை மேற்பரப்பில் மிதப்பதோடு மட்டுமில்லாமல், நீருக்கடியில் மூழ்கியும் வேட்டையாடுவதாக கூறப்படுகிறது.

பறக்கும் பாம்புகள் (Chrysopelea species)
தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் இந்தப் பாம்புகள், தங்கள் விலா எலும்புகளைத் தட்டையாக்கி, காற்றில் அலைவு அசைவுகளை உருவாக்கி, மரங்களுக்கு இடையே பறக்கின்றன. இவை 100 மீட்டர் தூரம் வரை பறக்குமாம். இந்த பறக்கும் திறன் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வேட்டையாடுவதற்கும், வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிப்பதற்கும் உதவுகிறது.
பாரடைஸ் மரப்பாம்பு (Chrysopelea paradisi)
பச்சை மற்றும் கருப்பு நிற வண்ணக் கோடுகள் உள்ள இந்தப் பாம்புகள் வெப்பமண்டல காடுகளில் மரங்களுக்கு இடையே பறக்கிறது. இவை காற்றில் பறக்கும்போது காற்றியல் இயக்கங்களைப் பயன்படுத்தி, பூச்சிகள் மற்றும் சிறிய பல்லிகளை வேட்டையாடுகின்றன.
இந்த பாம்புகள் தங்கள் சூழலுக்கு ஏற்ப தகவமைத்து, பல்வேறு தன்மைகளை வெளிப்படுத்தும் திறன்களை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.