Soori: "அன்று சுவர்களில் நிறங்களைப் பதித்தேன்; ஆனால் இன்று திரையில்...” - நெகிழும் நடிகர் சூரி
தமிழ் சினிமாவில் லைட் மேனாக நுழைந்து, பின்னர் திரையில் கூட்டத்தில் ஒருவனாக அவ்வப்போது வந்து, வெண்ணிலா கபடி குழுவால் ரசிகர்கள் மனதில் பதிந்து, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வெள்ளைகாரத்துரை போன்ற படங்கள் மூலம் முழுநேர காமெடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்று வெற்றிமாறனின் `விடுதலை' மூலம் கதையின் நாயகனாக மாறியிருக்கிறார் சூரி.
அடுத்தடுத்து, கொட்டுக்காளி, கருடன் ஆகிய திரைப்படங்களில் நடிகராக மிளிர்ந்த சூரியின் அடுத்த படமான, இயக்குநர் ராமின் `ஏழு கடல் ஏழு மலை' விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான வாசகத்துடன் வீடியோ ஒன்றைச் சூரி பதிவிட்டிருக்கிறார்.
“சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்!”
— Actor Soori (@sooriofficial) February 11, 2025
“Started my life as a painter, painting walls—today, I paint emotions on screen. Life moves when we dare to dream!” #கனவுகள்pic.twitter.com/AEncYqILwl
ஒரு கட்டிடத்தில் கயிற்றில் தொங்கியவாறு சுவர்களுக்கு வெள்ளையடிப்பதைப் பக்கத்துக்குக் கட்டிடத்திலிருந்து கண்ணாடி வழியாகச் சூரி பார்க்கும் அந்த வீடியோவுக்கு மேல், ``சுவர்களில் நிறங்களைப் பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளைப் பதிக்கிறேன்!" என்று சூரி பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...