செய்திகள் :

Soubin Shahir: ``என்னை யாரும் கைது செய்யவில்லை; என் பக்கம் நியாயம் இருக்கிறது'' - சௌபின் சாஹிர்

post image

சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் சாஹிர், சந்து சலீம்குமார், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'மஞ்சும்மல் பாய்ஸ்'.

வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் 'Kumbalangi Nights' படம் மூலம் பிரபலமான சௌபின் சாஹிர். இப்போது லோகேஷ் இயக்கும் ரஜினியின் 'கூலி' படத்திலும் முக்கியக் கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சௌபின் சஹிர்

இந்நிலையில் `மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்களான செளபின் சாஹிர் மற்றும் அவரது தந்தை பாபு சாஹிர் மற்றும் சான் ஆண்டனி  ஆகியோர் மீது பண மோசடி வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

செளபின் சாஹிர், 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தைத் தயாரிக்க சிராஜ் ஹமீத் என்பவரிடம் இருந்து சுமார் ரூ.7 கோடியை பெற்றதாகவும், பதிலுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் லாபத்தில் 40% வழங்குவதாகவும் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், படம் வெளியான பின்னர் சௌபின் சாஹிர் அந்த 40% லாபத்தையோ, ரூ.7 கோடி பணத்தையோ கூட திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக சிராஜ் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் போலீசார் அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட சௌபின் சாஹிர், அவரது தந்தை பாபு சாஹிர் மற்றும் மற்றொரு தயாரிப்பாளர் சான் ஆண்டனி மூன்று பேரும் புகார் அளித்தவரிடம் பண மோசடியில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. நீதிமன்றம் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், மூன்று பேரும் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் பரவின.

சௌபின் சாஹிர்

இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் சௌபின் சாஹிர், "என்னை யாரும் கைது செய்யவில்லை. இந்த வழக்கில் தேவை ஏற்பட்டால் அழைப்பதாக மட்டும் நிதீமன்றம் தெரிவித்திருக்கிறது. என் மீது பணமோசடி தொடர்பான குற்றச்சாட்டிற்கு விசாரணையின்போதே நான் குற்றம் செய்யவில்லை என்பதற்கான அனைத்து வரவு செலவு, கடனாக வாங்கியப் பணத்தை திருப்பிக் கொடுத்த ஆவணங்கள் எல்லாவற்றையும் உரிய முறையில் சமர்பித்துவிட்டேன். காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. காவல்துறையும், நீதிமன்றமும் என் பக்கமுள்ள நியாயங்களை புரிந்துகொண்டது. அதற்கான ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்திருக்கிறேன். விரைவில் நல்ல தீர்ப்பு வரும். நான் கைதாகவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

பாலா: "யாருக்காவது நல்லது செய்யணும்" - லாட்டரி வென்ற மனைவி; கொண்டாடிய அஜித் பட நடிகர்!

மலையாள நடிகர் பாலா தனது மனைவியான கோகிலா காருண்யா லட்டரியில் 25,000 ரூபாய் வென்றதை சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு கொண்டாடியுள்ளார். அவருடைய லாட்டரி டிக்கெட் எண் 4935 என்பதைக் காண்பித்து, வீடியோ ... மேலும் பார்க்க

'ப்ரேமலு 2' நிறுத்திவைப்பு! - பகத் பாசில் தயாரிப்பில் நிவின் பாலியை இயக்கும் 'ப்ரேமலு' இயக்குநர்!

கடந்தாண்டு மலையாளத்தில் வெளியாகியிருந்த 'ப்ரேமலு' திரைப்படம் கோலிவுட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் இப்படியான பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வரும் என அப்போதே அறிவிப்பு வெள... மேலும் பார்க்க

பல்டி: மலையாள சினிமாவில் 'சாய் அபயங்கர்' என்ட்ரி - மோகன்லால் வரவேற்பு!

மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகிவரும் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் பல்டி. வளர்ந்துவரும் நட்சத்திரமான ஷேன் நிகாமின் 25வது திரைப்படம் இது. ஏற்கெனவே இந்த திரைப்படத்துக்கு நிலவும் பெர... மேலும் பார்க்க

Mollywood: நடிகை மீது இயக்குநர் புகார்; கைது செய்ய உத்தரவிட்ட கேரள நீதிமன்றம்

மலையாளத் திரையுலகின் முக்கியமானவர் பாலசந்திர மேனன். இயக்குநர், கதாசிரியர், நடிகர் எனப் பல்வேறு துறைகளில் இயங்கிய இவர், பத்மஶ்ரீ விருதையும் வென்றிருக்கிறார். 1980-களில் 40 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.... மேலும் பார்க்க

Vedan: ``பணத்திற்காக சாதியை விற்க வேண்டிய அவசியம் எனக்கில்லை'' - விமர்சனத்துக்கு பதில் அளித்த வேடன்

2020-ம் ஆண்டு, ``நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக `வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தலைப்பில் தனியிசைப்பாடலை வெளியிட்டார் ராப் பாடகர... மேலும் பார்க்க

Anupama: "மலையாள சினிமாவில் விமர்சனங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன்" - அனுபமா வருத்தம்

பிரவீன் நாரயணன் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன், திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'Janaki vs State Of Kerala' திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகிற... மேலும் பார்க்க