செய்திகள் :

Squid Game Season 2 Review: `புதிய கேம்ஸ, பழைய கதை' - எப்படி இருக்கிறது இந்த கொரியன் ப்ரைடு ரைஸ்?

post image
பிங்க், மஞ்சள், ப்ளு என கலர்க்கலரான கண் கவர் வண்ணங்களுடன் மீண்டும் இரத்தக் கரை தெறிப்பதற்குத் தயாராகியிருக்கிறது ‘Squid Game -சீசன் 2’ விளையாட்டுக் களம்.

முதல் சீசனில் கதைநாயகன் சியோங் ஜி ஹுன், எல்லோரையும் கொன்று, கேம் லெவல்களை வென்று 45 பில்லியன் வாண் பணத்தைக் குற்றவுணர்வுடன் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார். ஏழு எபிசோட்கள் கொண்ட இந்த இரண்டாம் சீசனில் இரத்தக் கரை படிந்த அந்தப் பணத்தை அனுபவிக்க மனமில்லாமல், ஸ்குவிட் கேம் கும்பலை கையும் களவுமாகப் பிடிக்கத் தனக்கெனத் தனி அணியை துப்பாக்கிப் பயிற்சியுடன் தயார்செய்து ஆக்‌ஷனுக்குத் தயாராகிறார் கதைநாயகன். 

Squid Game Season 2

ஆனால் சியோங் ஜி ஹுன், தன்னை விடவும் ஓவர் ஸ்மார்ட்டாக இருக்கும் வில்லனிடம் மட்டிக்கொண்டு மீண்டும் தனியாக ஸ்குவிட் கேம் விளையாட்டுக் களத்திற்குச் செல்லும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. புது கேம்ஸ், புது ட்விஸ்ட்ஸ், வில்லனுடனே விளையாடும் த்ரில் என கதைக்களம் விரிகிறது. தன் முன் இருக்கும் சவால்களை முறியடித்து கதைநாயகன் மீண்டும் ஸ்குவிட் கேமில் வென்றாரா அல்லது திட்டமிட்டபடி அந்தக் கும்பலை கையும் களவுமாகப் பிடித்து காலி செய்தாரா என்பதுதான் இந்த இரண்டாம் சீசனின் கதைக்களம்.  

முதல் சீசனின் சாயலில் அதே டெய்லர், அதே வாடகை என கதை கொஞ்சம் சலிப்புத் தட்டினாலும், திரைக்கதைக் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது. ஆங்காங்கே தெரிந்த கதைகளையே மீண்டும் சொல்லும் தொய்வுகள் இருந்தாலும், முன்னும் பின்னும் என கதையை நகர்த்திக் குழப்பாமல், நேரடியாக கதைச்சொல்லும் விதத்திலும், எதிர்பாராத அடுத்தடுத்தக் காட்சி அமைப்பின் மூலமும் கவனம் ஈர்த்து, அடுத்தடுத்த எபிசோடுகளைப் பார்க்கக்கூட்டிச் செல்கிறது திரைக்கதை. புது புது கேம்ஸ் காட்சிகள் கதைக்குப் பெரும் பலமாக அமைந்திருக்கின்றன. 

Squid Game Season 2

கதைநாயகனாக நடித்திருக்கும் லீ ஜங் லே, `பணம் தேவைதான் ஆனால், அது நல்ல வழியில் சம்பாரிக்கவேண்டும்' என்ற நடுத்தர குடும்பஸ்தனின் மனநிலையையும், குற்றவுணர்வுடனும், துணிச்சலுடனும் எதையும் அணுகும் விதத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கேம்மின் திரில்லிங்கை மனதிற்குள்ளேயே ரசிப்பதிலும், நட்பு - வில்லனிஸம் இரண்டிற்குமிடையேயான கோட்டில் நின்று தடுமாறுவதிலும் கவனம் ஈர்த்து கதைக்குள்ளேயே நம்மைக் கூட்டிச் சென்றுவிடுகிறார் வில்லான நடித்திருக்கும் லி பியாங் ஹுன்.

முன்பிருந்த பின்னணி இசையைக் கொஞ்சம் மெருகேற்றியிருப்பது திரில்லரிங் உணர்வைக் கதைக்குக் கூட்டியிருக்கிறது. கலர் கலர் கேம்ஸ் செட்டிற்குள்ளேயேதான் முழு சீரிஸும் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் தீம் பார்க் போன்ற கேம்ஸ் செட். அதற்குள் ஒரே செட்டை பார்க்கும் சலிப்புத் தட்டாமல் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதே நேர்த்தியைப் படத்தொகுப்பிலும் காட்டியிருக்கலாம். முடிவுகள் தெரிந்த பின்பும் மீண்டும் மீண்டும் வரும் காட்சிகள் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நாயகன், வில்லன், போலீஸ் கதாபாத்திரங்கள் இந்த சீசனில் தொடர்கிறது. ஆனால், புதிதாக வரும் கதாபாத்திரங்கள் முதல் சீசனின் கதாபாத்திரங்களின் பிரதியாகவே இருப்பது சலிப்பை ஏற்படுகிறது. எப்படியும் கேம் நடந்தே தீரும் என்று தெரிந்த பிறகும், மீண்டும் மீண்டும் ‘ஆட்டத்தைத் தொடரலாமா?’ என வாக்கெடுப்புகள் நடத்தப்படுவது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. கேம்மிற்குள்ளே இருந்துகொண்டு கதைநாயகன் ஸ்குவிட் கேம்மை அடியோடு அழிக்க வேலை பார்க்கிறார்.

மற்றொரு புறம் வெளியில் ஸ்குவிட் கேம்மை காலிசெய்ய ஆக்‌ஷனுடன் இறங்கிய கும்பல் காரணமில்லாமல் பாதியிலேயே காணாமல்போவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அடுத்தடுத்த சீசனைத் தொடர்வதற்காகவே கதைக்களத்தை மீறி முடிவில்லா க்ளைமேக்ஸ்க்கு கதையை அடித்து இழுத்துச்சென்றது துருத்திக் கொண்டு தெரிகிறது.

Squid Game Season 2

முதல் சீசனைப்போலவே இதிலும் வில்லன் பக்கத்திலேயே இருந்தும் கொஞ்சம்கூட சந்தேகமில்லாமல் அவருடனே சேர்ந்து கடைசிவரை ஆயுதத் தாக்குதல் நடத்தும் வரை கதைநாயகன் ஆபார நம்பிக்கையுடன் இருப்பது கதைநாயகன் யார் என்ற சந்தேகத்தையும், சுவாரஸ்யமின்மையையும் ஏற்படுத்துகிறது. 

ஒட்டுமொத்தத்தில் இந்த ஸ்குவிட் கேம் சீசன் 2 புது புது கேம்களால், திரைக்கதையால் சுவாராஸ்யத்தைக் கூட்டியிருக்கின்றன. ஆனால் கச்சிதமான கதை முடிவும், வலுவான கதாபாத்திரங்களும் இல்லாமல் அவசர அடியாக செய்யப்பட்டிருக்கும் இந்த கொரியன் ப்ரைடு ரைஸ் உப்பு சப்பின்றி சாப்பிடும் கட்டாயத்திலேயே இருக்கிறது.

Marvel - DC: `கேப்டன் அமெரிக்கா', `சூப்பர் மேன்'... இந்தாண்டு வெளிவரவிருக்கு மார்வெல் டிசி படங்கள்!

கடந்த 2023-ம் ஆண்டு அமெரிக்காவில் ரைட்டர்ஸ் ஸ்டிரைக் (Writers Strike) நடந்தது. பல தரப்பு பரித்துரைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பிறகு அந்த வேலைநிறுத்தம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவுக்கு வந்தது. அ... மேலும் பார்க்க

97th Oscars: முதன்முறையாக ஆஸ்கர் நாமினேஷனில் திருநங்கை நடிகை - யார் இந்த கார்லா சோபியா காஸ்கான்?

`எமிலியா பெரெஸ் (Emilia Pérez) ' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளார் கார்லா சோபியா காஸ்கான் (Karla Sofía Gascón) ஆஸ்கர் விருதுக்கு முதல் முறை... மேலும் பார்க்க

97th Oscars: வெளியான ஆஸ்கர் நாமினேஷன்ஸ்; கடைசி ரேசில் நிற்கும் ப்ரியங்கா சோப்ரா தயாரித்த குறும்படம்!

2025-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளின் நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது.ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியாகி இருக்க வேண்டிய இப்பட்டியலானது லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தினால் தாமதமாகி தற்போது வெளியாகி இருக்கிறது... மேலும் பார்க்க

Breaking Bad: 4 மில்லியன் டாலர்! - விற்பனைக்கு வந்த பிரேக்கிங் பேட் வால்டர் வைட் வீடு!

உலகப் புகழ்பெற்ற பிரேக்கிங் பேட் (BREAKING BAD) தொடரின் முன்னணி கதாப்பாத்திரமான வால்டர் வைட்டின்(WALTER WHITE) வீடு விற்பனைக்கு வந்துள்ளது.2008-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகம் முழ... மேலும் பார்க்க