செய்திகள் :

Starlink: `நேற்று ஏர்டெல்; இன்று ஜியோ' - எலான் மஸ்க்குடன் கூட்டு சேர்ந்த அம்பானி... காரணம் என்ன?

post image

'இனி இந்தியாவில் ஸ்டார்லிங் உபகரணங்களை ஏர்டெல் ஸ்டோர்களில் வாங்கலாம்' என்று எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் கைகோர்த்தது குறித்து நேற்று அறிவித்திருந்தது ஏர்டெல் நிறுவனம்.

இந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் ஜியோவின் மார்க்கெட்டை பாதிக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்று ஸ்டார்லிங் நிறுவனத்துடன் ஏர்டெல் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தது போலவே, இன்று தாங்களும் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டிருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ நிறுவனத்தின் அறிக்கையில், "இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜியோ உலகின் மிகப்பெரிய மொபைல் ஆப்பரேட்டராக உருவெடுக்கும். மேலும், இதன்மூலம் இந்தியாவில் உள்ள கிராமப்புரம் மற்றும் தொலைத்தூர பகுதிகளுக்கு கூட இடைவிடாத நெட்வர்க்கை கொண்டு சேர்க்க முடியும். ஜியோ ஸ்டோர்களில் வெறும் உபகரணங்களை மட்டும் விற்கப்படாது. அது இன்ஸ்டாலும் செய்து தரப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

Airtel vs Jio vs vodafone

இதற்கு முன்பு ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விடவேண்டும் என்று முகேஷ் அம்பானியும், ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு தான் செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க்கும் மோதிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதில் ஏர்டெல் நிறுவனம் அம்பானி பக்கம் நின்றது.

கடந்த ஆண்டு ஜியோ, ஏர்டெல் vs ஸ்டார்லிங்காக இருந்த மோதலுக்கு பிறகு, இந்த ஆண்டு அடுத்தடுத்து இரண்டு நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போட்டுள்ளது ஸ்டார்லிங் நிறுவனம்.

'ஸ்டார்லிங் உபகரணங்களை எங்கள் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்' என்று கூறிய ஏர்டெல் நிறுவனத்தை சற்று முந்தி, 'உபகரணங்கள் பிளஸ் இன்ஸ்டலேஷன் இரண்டுமே எங்களிடம் கிடைக்கும்' என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் கடந்த அமெரிக்க பயணத்தின் போது, அவர் எலான் மஸ்க்கை சந்தித்தார். அந்த சந்திப்பிற்கும், இந்த ஒப்பந்தங்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

AI: செயற்கை நுண்ணறிவுக்கு பதற்றம் வருமா; மனநல சிகிச்சைக்கு உதவுமா? - புதிய ஆய்வு சொல்வதென்ன?

செயற்கை நுண்ணறிவால் (AI) உணர்வுகளை உணர முடியாது என்றாலும், அது 'பதட்டம்' போன்ற உணர்வுகளுக்கு நெருக்கமான ஒரு நிலையை அனுபவிக்க முடியும் என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. யேல் பல்கலைக்கழகம், ஹாஃபியா பல... மேலும் பார்க்க

Starlink: இந்தியாவில் என்ட்ரியாகும் எலான் மஸ்க் நிறுவனம்... அம்பானியின் ஜியோவிற்கு ஆபத்தா?!

கடந்த ஆண்டிலிருந்து எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் இந்திய தொலைதொடர்பு துறைக்குள் வர கடுமையாக முயற்சி செய்து வந்தது. கடந்த ஆண்டு, செயற்கைக்கோள் இணைய சேவை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து பேச்சு வ... மேலும் பார்க்க

Manus : மேனஸ் - ஏ.ஐ உலகின் `ஏகலைவன்!'

செயற்கை நுண்ணறிவு தொடர்பான கண்டுபிடிப்புகளும் அவற்றின் பயன்பாடும் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக சமீபத்தில் களமிறங்கியிருக்கிறது "மேனஸ்" என்கிற ஏ. ஐ பொது முகவர் (General ... மேலும் பார்க்க

Manus: உலகின் முதல் முழு சுயாதீன ஏஐ ஏஜென்ட் - சீனாவில் ஓர் எழுச்சியும், சில கேள்விகளும்!

சீனாவின் புதிய செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட் ஆன மேனஸ் (Manus), சிக்கல்கள் நிறைந்த நிஜ உலகப் பணிகளைக் கையாளும் திறனுடன் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. Manus - AI agentசீன முதலீட்டாளர்கள் மற்று... மேலும் பார்க்க

Skype: 'இனி ஸ்கைப் கிடையாது... 'இது' தான்!' - மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

Skypeமைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வீடியோ கான்பரன்சிங் தளமான ஸ்கைப்(Skype) தள சேவைகளை வரும் மே மாதத்தில் நிரந்தரமாக மூட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செயலிக்கு மாற்றாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயனர்கள்... மேலும் பார்க்க

Jio Hotstar: `இனி ஐ.பி.எல் பார்க்க சந்தா கட்டணும்' உதயமாகும் ஜியோ ஹாட்ஸ்டார்! -என்னென்ன மாற்றங்கள்?

இந்தியாவில் ஓ.டி.டி-யை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது.ரிலையன்ஸ் நிறுவனத்தின் `ஜியோ சினிமா' ஓ.டி.டி தளமும் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளமும் ஒன்றிணையவிருக்கிறது என கடந்தாண்டே பேசப... மேலும் பார்க்க