சிவகங்கை மாவட்டம்: பிளஸ் 1 தோ்வில் 94.79 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி!
Tessy Thomas: இந்தியாவின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் `ஏவுகணை பெண்மணி' டெஸ்ஸி தாமஸ் யார்?
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதைத் தொடர்ந்த தாக்குதல்களில் வெற்றிகரமாக இலக்குகளை பதம்பார்த்துள்ளன நம் ஏவுகணைகள்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சண்டையை உலகமே ஆர்வத்துடன் பார்க்க மற்றுமொரு காரணம் உள்ளது. இந்த மோதல் இந்தியாவின் ஏவுகணை மற்றும் வான்படையின் சக்தியை சோதனைக்கு உட்படுத்தியுள்ளன.
இந்திய ராணுவத்தின் பலத்தையும் பராக்கிரமத்தையும் ஆயுத நிபுணர்கள் எடைபோட இந்த சோதனை பயன்பட்டுள்ளது. போர் பற்றிய தரவுகள் வெளியான உடனேயே இந்தியாவிற்கு ஏவுகணைகளை வழங்கிய ரஃபேல் நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்தது கவனிக்கத்தக்கது!

இந்த போரில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது, பிரம்மோஸ் மீயொலி (சூப்பர் சோனிக்) ஏவுகணை. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எல்லை தாண்டியுள்ள தீவிரவாத முகாம்களைத் தாக்க இந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டது.
இந்திய விமானப்படையும் அதன் ஏவுகணைகளும் வெற்றி வாகை சூடியிருக்கும் இந்த தருணத்தில், இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி என அழைக்கப்படும் டெஸ்ஸி தாமஸ் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
Tessy Thomas சாதித்தது என்ன?
இந்தியாவின் அணு ஆயுத கிடங்கில் உள்ள பல்வேறு ஏவுகணைகளை உருவாக்கிய அக்னி திட்டத்தை வழிநடத்திய விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ்.
இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO)-ல் ஏரோநாட்டிகல் அமைப்புகளுக்கான பொது இயக்குநராக பணியாற்றினார்.

இந்தியாவில் ஏவுகணை திட்டத்தை தலமைதாங்கிய முதல் பெண் அறிவியளாலர் இவரே. அக்னி திட்டத்தில் அக்னி-III, அக்னி-IV, மற்றும் அக்னி-V உள்ளிட்ட ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. டெஸ்ஸி தாமஸின் ஏவுகணை தொழில்நுட்ப அறிவு, குறிப்பாக திட உந்துசக்தி அமைப்புகளில் (solid propellant systems) அவரது நிபுணத்துவம் இந்திய ஏவுகணைகளின் சக்தியை புதிய உச்சத்திற்கு கொண்டுசென்றது.
யார் இவர்?
கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஏப்ரல் 1963-ல் பிறந்தவர் டெஸ்ஸி தாமஸ். திருச்சூர் அரசு பொறியியல் கல்லூரியில் மின் பொறியியலில் இளங்கலை தொழில்நுட்பமும் (B.Tech), புனேவில் உள்ள ஆயுத தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏவுகணைகளுக்கான துறையில் தொழில்நுட்ப முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
1988-ம் ஆண்டு DRDO-வில் இணைந்த டெஸ்ஸி இந்தியாவின் நீண்ட தூர ஏவுகணைத் திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
DRDO-வில் ஆப்பரேஷன்ஸ் மேனேஜ்மண்ட் பிரிவில் எம்.பி.ஏ பட்டமும், ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏவுகணை வழிகாட்டுதலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
அக்னி திட்டத்தில் டெஸ்ஸாவின் பங்கேற்பு என்ன?
அக்னி திட்டம் என்பது இந்தியாவின் அணு ஆயுத வலிமையை அதிகரிப்பதற்காக நடத்தப்பட்ட நீண்ட கால திட்டமாகும். ஆரம்பத்தில் அக்னி II, அக்னி III திட்டங்களில் துல்லியமாக இல்லக்குகளைத் தாக்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளில் பணியாற்றினார்.

இவரை டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தான் முதன்முறையாக பணியமர்த்தியிருக்கிறார்.
அடுத்ததாக 3000 கிலோமீட்டர் வரை உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய அக்னி III திட்டத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். அக்னி IV திட்டத்தில் திட்ட இயக்குநராக செயல்பட்டார். 2011ம் ஆண்டில் இந்த நவீன ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இந்தியாவின் அணு ஆயுத சக்தி வளர்ச்சியில் மிகப் பெரிய மைல் கல்லாக அமைந்த அக்னி V திட்டத்தையும் இவரே வழிநடத்தினார்.
உலகம் முழுவதுமே ஏவுகணை உருவாக்கம் ஆண்களுக்கான துறையாக பார்க்கப்பட்டபோது, ஒரு பெண்ணாக இந்த துறையில் மிகப் பெரிய சாதனைகளைப் படைத்து `அக்னி புத்திரி' என்ற பெயரைப் பெற்றுள்ளார் டெஸ்ஸி தாமஸ்.
டெஸ்ஸி தாமஸ் DRDO-ல் ஏரோநாட்டிகல் சிஸ்டம்ஸ் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றினார். கடந்த 2024ம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள நூர் இஸ்லாம் உயர்கல்வி பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக அறிவிக்கப்பட்டார்.