பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: ரயில்வே அதிரடி
Thalaivan Thalaivi: "எளிமையாக பழகுவதில் ரஜினிக்குப் பிறகு விஜய் சேதுபதி!" - பகிர்கிறார் சரவணன்
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டில் வைத்து செய்தியாளர்களிடம் படக்குழுவினர் திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கின்றனர்.
நடிகர் சரவணன் பேசுகையில், "சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிற படத்துல நான் நடிச்சிருக்கேன்னு சொல்றதே பெரிய விஷயம். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்துல நான் கடைசியா 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்துல நடிச்சிருந்தேன்.
இது அவர் இயக்கத்துல நான் நடிக்கிற இரண்டாவது திரைப்படம். விஜய் சேதுபதி சார்கூட இப்போதான் முதல் முறையா இணைந்து நடிக்கிறேன்.

ரொம்பவே எளிமையா பழகக்கூடிய ஹீரோவா ரஜினி சாருக்குப் பிறகு நான் விஜய் சேதுபதி சாரைத்தான் சொல்லுவேன். இந்தத் திரைப்படம் எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய குடும்பக் காதல் திரைப்படம்.
குடும்பமான பிறகு காதலிக்கிறது, அதன் பிறகு வரக்கூடிய சின்னச் சின்ன சண்டைகள்னு ரொம்ப நேர்த்தியா இயக்குநர் பாண்டிராஜ் எடுத்திருக்கார்." என்றார்.
இவரைத் தொடர்ந்து வந்து பேசிய மைனா நந்தினி, "என்னை சினிமாவுல அறிமுகப்படுத்தியதே இயக்குநர் பாண்டிராஜ் சார்தான். சார் இயக்கத்துல நடிக்கிற படம்னு சொன்னா, நான் எதையும் கேட்கமாட்டேன்.
உடனடியா வந்து நடிச்சிடுவேன். குடும்பத்தை விரும்பக்கூடிய அனைவருக்கும் பாண்டிராஜ் சாரின் படங்கள் பிடிக்கும்," என்றார்.