ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியைக் கண்டித்து ஏப். 28-இல் ஆா்ப்பாட்டம்: இபிஎஸ்
Tilak Varma: 'அந்த நேரத்தில் கிரிக்கெட் பற்றியப் புரிதலே எனக்கு கிடையாது'- திலக் வர்மா ஓப்பன் டாக்
மும்பை அணி வீரர் திலக் வர்மா ஜியோ ஸ்டாருக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அந்த நேர்காணலில் பேசிய அவர், “ கடந்த ஆண்டு ஐதராபாத்தில் மும்பை அணிக்காக விளையாடியபோது, வார்ம் அப் செய்வற்காக வெளியே வந்தேன். அப்போது ரசிகர்கள் என் பெயரைக் கத்திக் கொண்டிருந்தார்கள்.

அதுவே எனக்கே ஆச்சரியமான அனுபவமாக இருந்தது. தொடக்கத்தில் ரோஹித் சர்மா என் பின்னால் தான் வருகிறார் என நினைத்தேன். ஆனால் ரசிகர்கள் எனக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது புதிய அனுபவமாக இருந்தது. எப்போதும் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரிடம் சொல்வது ஒன்றுதான். இதுவரை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற உணர்வை அனுபவித்ததே கிடையாது.
2022 ஆம் ஆண்டு மும்பை அணியில் இணைந்தேன். அதன்பின் ஒருமுறை கூட மும்பை அணி கோப்பையை வெல்லவில்லை” என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து ஹர்திக் குறித்து பேசிய அவர், “ இந்திய அணிக்காக எனது டி20 அறிமுக கேப் ஹர்திக் பாண்டியா கைகளில் இருந்து பெற்றேன்.
மும்பை அணியில் மட்டுமல்லாமல் இந்திய அணியில் பாசிட்டிவான ஒரு சூழலை உருவாக்கக்கூடியவர். அது எங்கள் பார்ட்னர்ஷிப்பின் போது நன்றாக வெளிப்படும். சில நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் எந்தவித சிக்னலும் காட்டாமலே ஓடுவோம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் ஐபிஎல் தொடரின் முதல் சீசன் பற்றி பேசிய அவர், “ 2008ல் பிரெண்டன் மெக்கல்லம் 158 ரன்களை விளாசினார். அந்த ஸ்கோரை எப்படி அடித்தார் என்ற ஆச்சரியம் இன்னும் இருக்கிறது. அந்த நேரத்தில் கிரிக்கெட் பற்றிய புரிதலே எனக்கு கிடையாது.
2010ஆம் ஆண்டுதான் கிரிக்கெட்டை புரிந்து கொள்ள தொடங்கினேன். 2011ல் இந்தியா உலகக்கோப்பை வென்ற போது, நானும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும். ஒரு பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என கனவு காணத் தொடங்கினேன்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...