செய்திகள் :

TMC: FIR பதிவு செய்த காவல்துறை: `மடையர்களுக்கு இதெல்லாம் புரியாது' - எம்.பி மஹுவா மொய்த்ரா காட்டம்

post image

பங்களாதேஷிலிருந்து சட்டவிரோத ஊடுருவல்களை மேற்கு வங்க அரசு அனுமதிப்பதாகவும், அவர்களை வாக்கு வங்கியாக திரிணாமுல் காங்கிரஸ் பார்ப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா, கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ``இந்திய எல்லைகளைப் பாதுகாப்பது உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை அமித் ஷா தட்டிக்கழிக்கக் கூடாது.

எம்.பி மஹுவா மொய்த்ரா
எம்.பி மஹுவா மொய்த்ரா

அவர் தன் பொறுப்பில் தவறி, நூற்றுக்கணக்கானோர் இந்தியாவிற்குள் நுழைவதை அனுமதித்தால், அவர் வெட்கித் தன் தலையை மேசையில் வைக்க வேண்டும்" என்று கடுமையாக விமர்சித்தார்.

மஹுவா மொய்த்ராவின் இந்தக் கருத்து ஜனநாயக நிறுவனங்களை அவமதித்ததாகவும், வெறுப்பை விதைப்பதாகவும், தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் வசிக்கும் கோபால் சமந்தோ என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

சொலவடைச் சொல்

அதன் அடிப்படையில் மஹுவா மொய்த்ரா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தன் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, 'அப்கி பார், 400 பார்' (இம்முறை, 400ஐத் தாண்டி) என்ற முழக்கம் அடிபட்டுப் போனது.

'இந்த முடிவு மோடியின் முகத்தில் விழுந்த அறை' என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அப்படியானால் யாராவது பிரதமர் மோடியின் முகத்தில் சென்று அறைந்தார்களா? இல்லை... 'தலைகள் உருளும்' எனக் கூறுகிறார்கள். தலைகள் உருண்டதா?

எம்.பி மஹுவா மொய்த்ரா
எம்.பி மஹுவா மொய்த்ரா

நான் கூறியது ஒரு சொலவடைச் சொல். 'Heads will roll' (தலைகள் உருளும்) என்பது பொறுப்புடைமைக்கான ஒரு சொலவடை. அதேபோல், வங்காள மொழியில், 'லொஜ்ஜாய் மாதா காடா ஜாவா' (Lojjay Matha Kata Jawa) என்றால், நீங்கள் மிகவும் வெட்கப்பட்டு, உங்கள் தலையை நீங்களே வெட்டிக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

அதாவது பொறுப்பேற்பது, கடமையை ஏற்றுக்கொள்வது என்று பொருள்படும். இது ஒரு சொலவடை அவ்வளவுதான். FIR-ல் நான் சொன்ன சொலவடைக்கு வார்த்தைக்கு வார்த்தை பொருள் பார்த்து குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

நீங்கள் வங்காளத்திலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும் மொழிபெயர்க்க கூகுள் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தும் போது போலியான FIR-களைப் பதிவு செய்யத்தான் வேண்டும். மடையர்களுக்கு சொலவடைகள் புரியாது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

GST 2.0: செப்டம்பர் 22 முதல் எந்தெந்தப் பொருள்களுக்கு வரி குறைகிறது? முழுப் பட்டியல்!

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது சுதந்திர தின விழா உரையில் இந்திய பிரதமர் மோடி அறிவித்த ‘தீபாவளி கிஃப்ட்’ நேற்று வெளிவந்துவிட்டது.ஆம்... ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ... மேலும் பார்க்க

North Korea: முதன்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் உன் மகள் - இவர்தான் அடுத்த அதிபரா?

சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அவருடைய மகளான ஜூ ஏ (Kim Ju Ae)-வை முதன்முறையாக வெளிநாட்டு பயணத்துக்கு அழைத்து வந்துள்ளார்.ஏற்கெனவே ஜூ ஏ, கிம் ஜாங் உன்னின் அரசியல... மேலும் பார்க்க

Kim Jong Un: சீனாவுக்கு ரயிலில் சென்ற கிம் ஜாங் உன்; `நகரும் கோட்டை' பற்றி தெரியுமா?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவின் இரண்டாம் உலகப்போர் முடிவைக் கொண்டாடும் மாபெரும் அணிவகுப்பில் கலந்துகொள்ள நேற்று (செப்டம்பர் 3), தனது பிரத்யேக ரயிலில் மகளுடன் வந்தடைந்தார்.ரஷ்யா, சீனா என எங்கு ப... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்.22 முதல் அமல் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம... மேலும் பார்க்க

NDA: `தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்!' - டிடிவி தினகரன் அறிவிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக்க... மேலும் பார்க்க