செய்திகள் :

Transgender’s hostel: கேரளாவில் முதன்முறையாக தொடங்கப்பட்ட திருநங்கை மாணவர்கள் விடுதி!

post image

கேரளாவில் திருநங்கை மாணவர்களுக்காக முதல்முறையாக தனிச்சிறப்பு விடுதி இன்று ஆகஸ்ட் 26ம் தேதி தொடங்கப்பட்டிருக்கிறது. கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட இந்த விடுதிக்கு 'வெம்பநாடு' என பெயரிடப்பட்டுள்ளது. கேரள மாநில சமூகநீதி அமைச்சர் ஆர்.பிந்து இதைத் தொடங்கிவைத்திருக்கிறார்.

திருநங்கை மாணவர்களில் பலர், தங்கள் வீடுகளிலிருந்து ஆதரவு பெற முடியாமல், வாடகை வீடுகளிலும், பாகுபாடு மற்றும் நிதி சிரமங்களால் தங்க முடியாமல் தவிக்கும் சூழலில் படித்து வருகின்றனர். அவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தவும், தங்கிப் படிப்பதற்கும் உதவியாக இவ்விடுதி அமைக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக சிறிய கட்டடமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த திருநங்கை மாணவர்களுக்கான தனிச் சிறப்பு விடுதி வரும் காலங்களில் பல கல்லூரி, பள்ளிகளில் விரிவுப்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.

மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்

இது குறித்துப் பேசியிருக்கும் கேரள மாநில சமூகநீதி அமைச்சர் ஆர்.பிந்து, "திருநங்கை மாணவர்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தனிச் சிறப்பு விடுதி வராலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். திருநங்கை மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால், அவர்களுக்கென தனிச் சிறப்பு வசதி பெற்ற விடுதிகள் அவசியம். சமூகத்தால், குடும்பத்தால் கைவிடப்பட்ட அவர்களுக்கு இது போன்ற உதவிகள் கல்வி கற்பதற்கான நல்ல சூழலை ஏற்படுத்திக்கொடுத்து ஊக்கமளிப்பதாக இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது" - பாஜக அமைச்சர் பேச்சு

சமீபத்தில்பாஜக எம்.பி அனுராக் தாகூர், தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாசல பிரதேசத்தில் உள்ள பி.எம் ஶ்ரீ பள்ளி ஒன்றில்மாணவர்களிடம் உரையாடும் போது, "விண்வெளிக்கு முதன் முதலில் சென்றது அனுமன் ஜி தான்... மேலும் பார்க்க

ஆ.ராசா திறந்துவைத்த பஸ் ஸ்டாப்; `கட்டுமான செலவை விட விளம்பர செலவு அதிகம்போல...'- எழுந்த விமர்சனம்!

நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி கனவு தற்போது சாத்தியப்பட்டிருக்கிறது. ஊட்டியில் உள்ள இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாள... மேலும் பார்க்க

பஞ்சாப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்; முதல்வர் நெகிழ்ச்சிப் பதிவு; பஞ்சாப் முதல்வர் சொன்னது என்ன?

முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று பள்ளிகளில் காலை உணவுத் திட்டம். இந்தத் திட்டத்தை 15.9.2022 அன்று மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு கா... மேலும் பார்க்க

நெல்லை ஆணவக் கொலை: கவின்குமார் தந்தையுடன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த திருமாவளவன்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவீன்குமாரின் தந்தை சந்திரசேகரை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர மு.க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் வைத்து சந்தித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன். கவினின் குடு... மேலும் பார்க்க

பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா பராமரிப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோயிலாறு அணை. 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை மாவட்டத்தின் மிக... மேலும் பார்க்க

கர்நாடகா: ஒரே எண்ணில் 4 ஆடம்பர கார்கள், ஆன்லைன் பந்தயத் தளங்கள்; காங்கிரஸ் MLA கைதின் பின்னணி என்ன?

கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே.சி. வீரேந்திரா, “பப்பி” என அழைக்கப்படும் இவர், சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய வியாபாரம் மற்றும் பணமோசடி வழக்கில் சிக்கி அமலாக்க இயக்குநரால் (ED) ஆகஸ்... மேலும் பார்க்க