செய்திகள் :

Travel Contest: தென்றல் தவழும் தென்காசியில் ஒருநாள்!

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

தெளிவான திட்டமிடலுடன் தொடங்கும் சுற்றுலா, ஒருவகை மகிழ்ச்சி என்றால், எவ்வித திட்டமிடலும் இன்றி, ஒரேநாளில் செல்லும் இடத்தை தேர்வு செய்து, பயணத்தை தொடங்குவது என்பது வேறுவகை அனுபவம்.

அதுவும் நம் பால்ய காலத்து நினைவுகளை கிளர்ந்தெழச் செய்யும் வகையில், நாம் வாழ்ந்த ஊரை, பல்லாண்டுகளுக்கு பின்னர் பார்வையிடுகையில் எழும் உணர்வு தனித்துவமானது.

அவ்வகையில் எங்கள் மனதில், பசுமை மாறா நினைவுகளை அள்ளித்தந்த, தென்றல் தவழும் தென்காசி-க்கு நானும் என் சகோதரனும் குடும்பத்துடன் சென்ற அனுபவங்களின் தொகுப்பே இக்கட்டுரை.

இப்போது நாங்கள் வசிக்கும் தூத்துக்குடியிலிருந்து 100 கி.மீ தொலைவிலேயே அமைந்திருந்தாலும், ஏனோ கடந்த பதினேழு ஆண்டுகளாக தென்காசி செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை.

சென்னையிலிருந்து, விடுமுறைக்கு வருகை புரிந்த சகோதரனுடன், பள்ளிப் பருவ நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கையில், “தென்காசி என்னமோ பாகிஸ்தான்ல இருக்குற மாதிரி ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்குறீங்க? கார ஸ்டார்ட் பண்ணா ரெண்டு மணி நேரத்துல போயிடலாம்”-னு மனைவி சொன்ன அந்த நொடியில் உதயமானது இந்தப் பயணம்.

பயணத்திற்கான திட்டமிடலுக்கு ஒரு இரவு மட்டுமே இருக்கும் நிலையில் இந்தப் பயணம் முழுக்க முழுக்க எங்களுக்கானதாக மட்டும் இல்லாமல், எங்கள் குடும்பத்தினருக்கும் உற்சாகம் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் எனக் கருதியதால், தென்காசி அருகிலுள்ள பாலருவி மற்றும் கும்பாவுருட்டி அருவிகளையும் பார்வையிடும் இடங்களின் பட்டியலில் இணைத்துக் கொண்டோம்.

 மறுநாள் காலை எங்கள் பயணம் தொடங்கிற்று. காலை 10 மணி அளவில் முதலாவதாக நாங்கள் சென்ற இடம் தென்காசியின் பெருமைமிகு “காசி விஸ்வநாதர் கோவில்”.

உண்மையில் எத்தனையோ கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த கோவிலில் பெறும் தனித்துவமான அனுபவம் அங்கு சென்றவர்களால் மட்டுமே உணர முடியும். 

இத்தனை காற்றோட்டமான கோவிலை நீங்கள் வேறெங்கும் காணமுடியாது. பிரம்மாண்டமான 175 அடி உயர ராஜகோபுரம், விரைவில் நடைபெறவிருக்கும் கும்பாபிஷேக நிகழ்வுக்காக, புதிதாக வர்ணம்  தீட்டப்பட்ட கலைநயம் மிகுந்த சிற்பங்களால் புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.

கடந்த  கும்பாபிஷேக நிகழ்வின் போது கடலென கூடிய மக்கள் வெள்ளத்தில் நாங்களும் குடும்பத்துடன் பங்கேற்ற நினைவுகளை பகிர்ந்தபடி, காசி விஸ்வநாதரையும், உலகம்மனையும் தரிசித்து வெளியேறினோம்.

(குறிப்பு:- தென்காசியில் பெரும்பாலானோர் இக்கோவிலை உலகம்மன் கோவில் என்றே அழைப்பர்). 

பின்னர் அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், சுவாமி சன்னதி தெருவில் அமைந்துள்ள, நாங்கள் எட்டாம் வகுப்பு வரை பயின்ற, 7வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்குச் சென்றோம்.

இடைப்பட்ட காலங்களில் எங்கள் பள்ளி வெகுவாக மாற்றம் கண்டிருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. நாங்கள் படிக்கும் போது, இருபாலருக்கும் பொதுவான கதவில்லா, மேற்கூறையில்லா கழிப்பறையில், வெளியே நின்று “ஆணா... பெண்ணா..?” என்று உரக்க சப்தமிட்டு உள்ளே எதிர் பாலினத்தவர் எவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு செல்லும் நிலை இன்றிருக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து நகர்ந்தோம். 

அடுத்து நாங்கள் சென்ற இடம் இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. நாங்கள் 9 மற்றும் 10-ம் வகுப்புகள் பயின்ற இடம். ஒரு சிறு பள்ளியில் படித்து வந்த எனக்கு, ஒன்பதாம் வகுப்பில் மட்டுமே ஏழு பிரிவுகள் கொண்ட இப்பள்ளியின் பிரமாண்டம் ஆரம்பத்தில் சற்று அந்நியமாய் தோன்றியது. 

தான் படித்த இடங்களிலெல்லாம், மிகவும் நல்ல மாணவன் என்ற முத்திரையைப் பதிக்கக்கூடிய அண்ணனைப் பெற்றிருப்பதால், இயல்பாகவே  ஆசிரியர்களின் கூடுதல் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சுமை இங்கும் தொடர்ந்தது. 

அடுத்த இரண்டு ஆண்டுகளில், இங்குள்ள ஆலமரங்களில் ஏறி மரக்குரங்கு விளையாடிய தருணங்கள், கிரிக்கெட் பந்தைக் கொண்டு கால்பந்து விளையாடிய பொழுதுகள், தேசிய மாணவர் படை அனுபவங்கள் என இப்பள்ளி தந்த இனிமையான நினைவுகள் ஏராளம். 

அடுத்ததாக நாங்கள் வசித்த, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்குச் சென்றோம். உண்மையில், நாங்கள் பல ஆண்டுகளாக வசித்த வீட்டை அடையாளம் காண்பது அத்தனை கடினமாக இருக்கும் என எண்ணவில்லை.

நாங்கள் வசித்த சமயம், குடியிருப்புகளை விட அதிக காலியிடங்களை கொண்டிருந்த அந்தப் பகுதியில் காலியிடங்களை காண முடியாத சூழல் நிலவியது. நவீன மருத்துவமனை, உணவகங்கள், கடைகள் என அந்தப்பகுதி முற்றிலும் மாறியிருந்தது.

பின்னர் நாங்கள் சென்ற இடம் கடையநல்லூர் செல்லும் வழியிலுள்ள இடைகால். நான் பதினொன்றாம் வகுப்பு படித்த மீனாட்சி சுந்தரம் ஞாபகார்த்த மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று பார்த்த போது, கடந்த பதினேழு ஆண்டுகளில், விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்ததை தவிர பெரிதாக, வேறு மாறுதல் ஏதும் இன்றியிருப்பதை உணர்ந்தேன்.

இங்கும் பல நினைவுகள், குறிப்பாக 20A நகரப் பேருந்து. மூன்று ரூபாய் ஐம்பது பைசா பேருந்துக் கட்டணத்தை மிச்சம் பிடிக்கும் பொருட்டு, காலை 6:30 மணிக்கே தென்காசி பேருந்து நிலையத்தில் காத்திருந்து, மாணவர்களுக்கான கட்டணமில்லா 20A பேருந்தின், ஆளில்லாத சன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் அனுபவம் இனி ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை.

அங்கிருந்து நகர எத்தனிக்கையில் எதிர்ப்பட்ட பேருந்தின் பலகையில் 20ஏ என்ற எழுத்தைப் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஒன்றாம் வகுப்பு படிக்கும் எனது குழந்தையிடம் அந்த பேருந்தைக் காட்டி, “அந்த பஸ்லதான் அப்பாவும், பெரியப்பாவும் டெய்லி ஸ்கூலுக்கு வருவோம்” என்று சொன்னதும், “அப்போ, ஸ்கூல் பஸ்ல போக மாட்டீங்களாப்பா...?” என்ற மகளிடம், “முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஸ்கூல் பஸ்ல அனுப்புற அளவுக்கு உன் அப்பாகிட்ட இருக்குற பணம், எங்களோட அப்பாகிட்ட இல்லயே..!” ன்னு சொன்னதும் பதில் பேசாமல் முழித்தாள்.

தென்காசி

இதற்கு மேல் குடும்பத்தினரை கொடுமைப் படுத்த வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் அன்றைய நாளை முடித்துக்கொண்டு, மறுநாள் காலை எழில்மிகு திருமலைக்கோவிலில் அமர்ந்திருக்கும் திருமலைக் குமார சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, அச்சன் கோவில் செல்லும் வழியில், அடர்ந்த வனத்தின் ஊடே பயணித்து, கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சியை அடைந்து குளித்து மகிழ்ந்தோம்.

பின்னர், ஆரியங்காவு சென்று, 300 அடி உயரத்திலிருந்து பாய்ந்து வரும் பாலருவியின் பேரழகை ரசித்து மகிழ்ந்தோம். நான் இதுவரை சென்ற பல்வேறு அருவிகளில், ஐந்தருவி என் மனதிற்கு நெருக்கமானது, காரணம் அந்நீரில் காணப்படும் குளிர்ச்சி. ஆனால் அதனையும் விஞ்சி விட்டதோ..! என்று எண்ணும் அளவிற்கான ஜில்லென்ற பாலருவியின் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்து அங்கிருந்து விடைபெற்றோம்.

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Travel Contest : `புது உலகத்துக்குள் வந்து விட்டது போன்ற உணர்வு!' - இத்தாலி கேப்ரி ஐலண்ட் விசிட்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தி... மேலும் பார்க்க

Travel Contest : சிற்றோடைகள், அடர்ந்து வளர்ந்த காடுகள், அருவிகள்..! - உத்தரகாசி அற்புதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஊட்டி தெரியும்... ஆனா தருமபுரியில் இருக்கும் இந்த ”மினி ஊட்டி” பற்றி தெரியுமா? சூப்பர் பட்ஜெட் spot!

கோடைக்காலம் தொடங்கிவிட்டது, பலரும் இந்த சம்மருக்கு எங்கு சுற்றுலா செல்லலாம் என்று பிளான் செய்து கொண்டிருப்பார்கள். குறைந்த விலையில் நமக்கு அருகே இருக்கும் அழகான சுற்றுலா தலங்களை பார்க்க வாய்ப்பு கிடைத... மேலும் பார்க்க

Travel contest: 'த்ரில்லிங்கான வாகமன் ஜீப் சவாரி' - முதல் சுற்றுலா அனுபவத்தைப் பகிரும் பள்ளி மாணவி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: வால்பாறை - சாலக்குடி சாலை; காட்டுக்குள் சேட்டனின் சாயா; அதிரப்பள்ளி சுற்றுலா அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: 'வழி தவறி நுழைந்த அடர் காடு; களிறுகளின் கால் தடம்' - பரம்பிக்குளம் திரில் அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க