Trump: ``சீனா அதிபருடன் போனில் பேசினேன்; நாங்கள் இருவரும் சேர்ந்து...'' -டிரம்ப் சொல்வதென்ன?
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நடந்துவருகிறது. அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் டிரம்ப், முன்னர் பேசுகையில், சீன இறக்குமதி பொருள்களுக்கு கிட்டதட்ட 60 சதவிகித வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தார். அவர் தனது தேர்தல் பிரசாரம் முழுவதிலும் சீனாவை கடுமையாக சாடியிருந்தார்.
இந்த நிலையில், டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில், "நான் சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைப்பேசியில் பேசினேன். பல பிரச்னைகளை நாங்கள் இருவரும் சேர்ந்து தீர்ப்போம் என்று எதிர்பார்க்கிறேன். நாங்கள் ஃபென்டனைல் (Fentanyl), டிக்டாக் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசினோம்.
அந்தத் தொலைப்பேசி அழைப்பு இரண்டு நாடுகளுக்கும் மிக நல்லது. நானும், ஜின்பிங்கும் இந்த உலகம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க எங்களால் முடிந்த அளவில் செயல்படுவோம்" என்று பதிவிட்டிருக்கிறார்.
போதைப்பொருள் இறக்குமதி, டிக் டாக் மூலம் சீனா தகவல்களை திருடுகிறது என்று ஏகப்பட்ட புகார்கள் சீனாவின் மீது அமெரிக்காவில் போய்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இரு நாட்டு அதிபர்களும் தொலைப்பேசியில் பேசியிருப்பது முக்கியமாக கருதப்படுகிறது.