செய்திகள் :

Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்லுபடியாகுமா?

post image

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளைச் செய்து வருகிறார். அதில் ஒன்று மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றியது. கடந்த மாதமே செய்தியாளர் சந்திப்பில், "மிக விரைவில், ஒரு மாற்றத்தை அறிவிக்க உள்ளோம். மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றப் போகிறோம். அது எங்களுடையது. அமெரிக்காவின் வளைகுடா... என்ன அழகான பெயர். இதுதான் சரியாக உள்ளது" எனக் குறிப்பிட்டார்.

Trump | ட்ரம்ப்

இந்த நிலையில், தற்போது மெக்சிகோ வளைகுடாவை, அமெரிக்க வளைகுடா எனப் பெயரை மாற்றம் செய்யும் உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். மேலும், 30 நாட்களுக்குள் பெயர் மாற்றத்தை முறைப்படுத்துமாறும் அமெரிக்க உள்துறைச் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் கரீபியன் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு பெருங்கடல் படுகைதான் மெக்சிகோ வளைகுடா. சுமார் 16 முதல் 20 லட்சம் சதுர கி.மீ கடல் பரப்பளவைக் கொண்ட இந்த வளைகுடாவில், மெக்சிகோவின் தமௌலிபாஸ், வெராக்ரூஸ், தபாஸ்கோ, காம்பேச், யுகடன் ஆகிய ஐந்து மாகாணங்களின் கடற்கரைகளும், அமெரிக்க மாகாணங்களான ஃப்ளோரிடா, அலபாமா, மிசிசிப்பி, லூசியானா, டெக்சாஸ் மற்றும் கியூபாவின் பினார் டெல் ரியோ, ஆர்டெமிசா ஆகிய மாகாணங்களின் கடற்கரைகளும் உள்ளன.

மெக்சிகோ வளைகுடா

உலகின் மிக முக்கியமான எண்ணெய் உற்பத்திப் பகுதிகளில் மெக்சிகோ வளைகுடாவும் ஒன்று. அமெரிக்காவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 14 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் 5 சதவீதமும் இந்த வளைகுடாவிலிருந்தே கிடைக்கிறது. மெக்சிகோவுக்கும் இந்த வளைகுடா மிகவும் முக்கியமானது, ஏனெனில் மெக்சிகோவுக்கு இங்கிருந்து கிடைக்கும் எண்ணெய் அதன் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வளைகுடா மறுபெயரிட சர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பு, ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலவியல் பெயர்கள் நிபுணர்கள் குழு (UNGEGN) உள்படப் பல சர்வதேச அமைப்புகளின் மதிப்பீடும், ஒப்புதலும் தேவை. ஒருவேளை புதிய பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டால், மெக்சிகோ, கியூபா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் புதிய பெயரைச் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் வகையில் தங்கள் அதிகாரப்பூர்வ வரைபடங்களையும் சட்டங்களையும் புதுப்பிக்க வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால்... நகரம் முழுவதும் வெடிக்கும்" - ஹாமஸை எச்சரிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அவரின் அதிரடி நடவடிக்கைகள், சர்ச்சைக்குள்ளாகும் சட்டங்கள், விமர்சனத்துக்குள்ளாகும் கருத்துக்களின் மூலம் தினம் தினம் செய்திகளில் இடம்பெறுகிறார். கடந்த வாரம்... மேலும் பார்க்க

``ஊழல் லிஸ்ட்டில் சிறை செல்லும் முதல் நபர் கமிஷன் காந்தி தான்" - அண்ணாமலை

‘ஊழல் அமைச்சர் காந்தி உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது திமுக ஊழல் அமைச்சர்களில் காந்தியே ம... மேலும் பார்க்க

செங்கோட்டையனால் மிரளும் எடப்பாடி? ஒரு பழைய பகை உள்ளது? | Elangovan Explains

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஒட்டி, எடப்பாடிக்கு பாராட்டு விழா எடுத்தார்கள். அதை மாஜி அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். 'என் உணர்வுகளை பகிர்ந்து உள்ளேன்' என அ... மேலும் பார்க்க

`சீமான் நல்ல என்டர்டெய்னர்; நானும் அவரை ரசிக்கிறேன்'- பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன்

தமிழக பாஜக-வில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று தேனியில் மாவட்டத் தலைவர் ராஜபாண்டி பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங... மேலும் பார்க்க

Census: `NFSA பலன்கள் கிடைக்காமல் 14 கோடி பேர் தவிப்பு; மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது?' - சோனியா

ஒரு நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிக அவசியமானதாக இருக்கிறது. காரணம், நாட்டில் எவ்வளவு மக்கள் இருக்கின்றனர், ஆண் பெண் விகிதம் எப்படியிருக்கிறது, எவ்வளவு பேர் கல்வியற... மேலும் பார்க்க

Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் செய்த அனுராக் தாகூர்

டெல்லியில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க 48 இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இ... மேலும் பார்க்க