செய்திகள் :

TVK: 'எதிர்ப்புகளை மீறி ஜெயிப்பதுதான் அரசியல் புதியவர்களுக்கான பொறுப்பு, கடமை' - நடிகர் பார்த்திபன்

post image

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி ஆண்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் அரசியலுக்கு புதிதாய் வருபவர்கள் எதிர்ப்புகளை மீறி ஜெயிப்பது தான் அவர்களுக்கு இருக்கும் பொறுப்பும், கடமையும் என கூறினார்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கும் விதம் பார்த்திபனுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ``மாணவர்களுக்கு, நேரம் மேலாண்மை, நேரத்திற்கு வேலையை முடித்தல் ஆகியவை மிகவும் முக்கியமானது. குறிப்பாக மாணவர்கள், கடின உழைப்புக்கு முக்கியத்துவம் தருவதைவிட கல்வியைதான் பிரதானமாக எடுக்க வேண்டும். கல்விதான் மாணவர்களின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும்" என்றார்.

கலந்துரையாடல்

இதன்பின்னர் நடிகர்‌ பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னமும் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சிசெய்யும் போது எதிர்க்கட்சிகள் நிறைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பின்னர் ஆளுங்கட்சி, எதிர்கட்சியாக வரும்போது அதே எதிர்ப்பை ரிப்பீட் மோட்டில் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தை எதிர்ப்பதை விட, அதை ஆதரித்து நல்ல விஷயங்களை வாங்கிக் கொள்வது நல்லது. மேலும் ஆளுங்கட்சியை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் அவர்கள் குற்றம் செய்யும்போது அதை சுட்டிக்காட்ட வேண்டியது மக்களின் கடமை.

டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் ரத்து விவகாரம் அரசியல் கட்சியின் வெற்றியல்ல, அது முழுக்க முழுக்க மக்களுக்கான வெற்றி. எனவே அதை தனியொரு கட்சியோ அல்லது தனிப்பட்ட மனிதரின் வெற்றியாகவோ பார்க்க முடியாது.

தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைக்களுக்காக நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டபோது அதில் வெற்றி கிடைக்காமல் போனதால் நடிகர்கள் சோர்வடைந்து போகிறார்கள்.

எந்த ஒரு விவகாரத்திலும், நடிகர்கள் பேசும்போது அவர்கள் பேசுவதை கவனிக்கிறார்களே தவிர அந்த பிரச்னையை கவனிப்பதில்லை. அதனால் பரந்தூர் விமான நிலையம் குறித்து நடிகர் சங்கம் போராட்டம் நடத்துவதை விட அந்த விவகாரத்தில் தமிழக அரசு தீர்வு காண்பது தான் நல்லது.

பேட்டி

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், நடிகர் விஜய்க்கு மக்களின் ஆதரவு முழுமையாக கிடைக்குமென்றால், அரசாங்கம் நினைப்பதை செய்ய முடியாமல் போகும். எனவே, த.வெ.க. தலைவர் விஜய்யை போராட்ட களத்திற்கு செல்ல விடாமல் தடுத்தது இயல்பான விஷயம்தான். அவரை போராட்ட களத்திற்குள் அனுமதிக்காதது, அதிகாரத்தில் இருக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக செய்கின்ற விஷயம் தான். இதைமீறி ஜெயிக்க வேண்டியது புதிதாக வருபவர்களுக்கான மிகப்பெரிய பொறுப்பாகவும் கடமையாக இருக்கும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

புதினை `லெஃப்ட் ஹேண்டில்’ டீல் செய்யும் ட்ரம்ப்... ரஷ்யா பணிந்து முடிவுக்கு வருமா உக்ரைன் போர்?!

பேச்சுக்கு அழைக்கும் புதின்எச்சரிக்கும் ட்ரம்ப்உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர புதின் தவறினால், ரஷ்யா மீது அதிக வரிகளையும், மேலும் பொருளாதாரத் தடைகளையும் விதிக்கப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் விடுத்த... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது... எம்.ஆர்.விஜயபாஸ்கர் எதிர்ப்பு; கிராம சபைக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு

கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள 157 ஊராட்சிகளில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததால், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் தலைமையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று (ஜன... மேலும் பார்க்க

'காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?' - காட்டமாக கேள்வி எழுப்பும் அன்புமணி

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிமாறப்படும் காலை உணவை தயாரித்து வழங்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருப்பதாக குற்றம்சாட்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்... மேலும் பார்க்க

Rahul Gandhi: நேதாஜி மறைவு குறித்த பதிவு; ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்த காவல்துறை

ஜனவரி 23 அன்று இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் எக... மேலும் பார்க்க

Vijay: `இப்போ பெரியவங்களுக்குள்ள சண்டை; அவரை விடுங்க’ - விஜய் குறித்த கேள்வியை தவிர்த்த சீமான்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தொடங்கியபோது, அவரை வரவேற்றுப் பேசியவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனால், விழுப்புரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநா... மேலும் பார்க்க