செய்திகள் :

Two-gender policy: `இது ஒன்றும் நோயல்ல மிஸ்டர் ட்ரம்ப்..!’ - பாலினம் குறித்து ஏன் இப்படி ஒரு முடிவு?

post image

ிறம் Gender Identity "பாலின அடையாளம்" என்ற சொல் முதன்முதலில் 1960-களில் தோன்றியது. ஆணாகவோ, அல்லது பெண்ணாகவோ சமூகத்தால் வகைப்படுத்தப்பட்ட நபர், தன் உள்ளுணர்வின் அடிப்படையில், தன்னை யாராகக் கருதுகிறார் என்ற அடிப்படையில் இந்த வார்த்தைப் பிரயோகம் கொண்டுவரப்பட்டது. காலப்போக்கில், இந்த சொல், பல்வேறு வகையில் தன்னை அடையாளம் காணும் நபர்களையும் சேர்த்துக்கொண்டு பயணிக்கிறது.

Gender Identity

Women's Health Research நிறுவனரும், உளவியல் மருத்துவருமான கரோலின் எம். மஸூர் (Carolyn M. Mazure), ``Sex (பால்) என்பதற்கும் Gender (பாலினம்) என்பதற்கு வித்தியாசம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இரண்டுக்கும் ஒரே பொருள் என்றே கருதுகிறார்கள். உண்மை அதுவல்ல. ஒரு குழந்தை பிறக்கும் போது, அதன் உயிரியல் அடிப்படையில் அதை ஆணாகவோ, அல்லது பெண்ணாகவோ இந்த முடிவு செய்யப்படுகிறது. இதைக் குறிப்பிடும் இடத்தில் Sex என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

Gender என்ற வார்த்தை அந்தக் குழந்தை வளர்ந்து வரும்போது, அவர் தன்னை என்னவாக உணர்கிறார் என்பதைப் பொறுத்து Gender தீர்மானிக்கப்படுகிறது. அப்போதுதான் தன்னுடைய விருப்ப Gender-ஐ உடை, நடை, பாவனைகள் மூலம் வெளிப்படுத்துவார்கள். அது சார்ந்துதான் அவர்களின் இணைத்தேர்வும் இருக்கும்." எனக் குறிப்பிடுகிறார்.

ஆய்வு முடிகளின் படி உடல் தேர்வு, இணைத் தேர்வு, உணர்ச்சிகள், விருப்பங்கள் என்ற அடிப்படையில் 70-க்கும் மேற்பட்ட Gender-கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தனை Gender-கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்காவில் இரண்டாம் முறை ஆட்சிப் பொறுப்பேற்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தன்னுடைய முதல் அறிவிப்பாக, ``ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும்" என்ற உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார். இது பாலினம் சார்ந்து இயங்குபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், அயற்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பாலினங்கள்

`ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது’ என்கிறார் டாக்டர் ஷாலினி. இது குறித்து பேசும் அவர், ``நாம் குழந்தையாக இருக்கும்போது ஆண் - பெண் என்ற இரண்டு Gender மட்டும்தான் நமக்குத் தெரியும். ஆனால், நம் வளர்ச்சியில் நமக்குள் நிகழும் மாற்றங்கள் புரிய ஆரம்பிக்கும். 16 - 17 வயதில் இருக்கும் ஒரு சிறுவன் நகபாலிஷ் வைத்தால் நன்றாக இருக்கும் என விரும்பலாம். ஆனால் அப்போதே அவனுக்குள் 'நான் பெண் போல ஆசைப்படுகிறேனே...' என்ற சந்தேகம் எழலாம். ஆனால், வயதுக்கு வந்த பிறகு நான் ஆண் என அவரே உணர்வார். அவர் அப்படி உணராதபட்சத்தில் அது மூன்றாம் பாலினமாக அடையாளப்படுத்தப்படும். இதே தான் பெண்ணுக்கும். ஆனால், ட்ரம்ப் என்னால் பல பாலினங்களையெல்லாம் பட்டியலிட முடியாது. ஆண் - பெண் என்ற இரண்டு பாலினங்களை மட்டும்தான் அனுமதிப்பேன் என்கிறார்.

அவரின் இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் 'என்னுடைய பாலினம் எனக்குப் பிடிக்கவில்லை, வேறு பாலினத்துக்கு மாறுகிறேன்' எனப் பலர் இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். சிறுவர் - சிறுமிகள் கூட பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள். மீடியாக்கள் இது தொடர்பாகத் தொடர்ந்து பேசிவந்ததால், கடந்த 5 ஆண்டுகளாக 'அவசரப்பட்டு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டாம்' என்ற விவாதங்களும் எழுந்தது.

இன்னொன்று, கடவுள் நம்பிக்கை இருக்கும் ட்ரம்ப், கடவுள் படைப்பில் ஆண் பெண் மட்டும்தான் என உறுதியாக நம்புகிறார்.

டாக்டர் ஷாலினி

அதுதவிர அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் அரசு செலவு, இன்சூரன்ஸ் பணம் என்பது போன்ற திட்டங்கள் அமெரிக்காவில் இருக்கிறது. எனவே, 'பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசு ஏன் செலவழிக்க வேண்டும்' என அவர் நினைக்கிறார். ஆனால், இந்த தடையின் பின்விளைவுகளை அமெரிக்கர்களே இன்னும் ஐந்து ஆண்டுகளில் புரிந்துகொள்வார்கள்.

ஏற்கெனவே தன்னை வேறு பாலினமாக அறிவித்துக்கொண்டவர்களுக்கு இனி சட்டச் சிக்கல்கள் ஏற்படும். அமெரிக்கா முன்னேறிய நாடாக இருந்தாலும் நிறம் போன்ற பிற்போக்கு சிந்தனைச் சிக்கல் இருக்கிறதுதானே... அதுபோல இனி மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் அச்சுறுத்தல் இருக்கும்.

இந்தியா எப்போதும் பன்மைத்துவம் வாய்ந்த நாடு. ஆழ்வார்களில் மாணிக்க வாசகர் ஹோமோ செக்ஸை குறிப்பிட்டு பாடல் பாடியிருக்கிறார். அதுகுறித்து நாம் குறை கூறவே இல்லை. அதை அப்படியே ஏற்று, பக்தி இலக்கியத்தில் வைத்திருக்கிறோம். எனவே இந்தியா இதை மாற்றிக்கொள்ளாது" என்றார்.

``மூன்றாம் பாலினத் தடை என்பது முதலாளித்துவ ஆணாதிக்க சிந்தனை” என்கிறார் சமூக செயற்பாட்டாளர் கிரேஸ் பானு. ``முதலாளித்துவ, ஆணாதிக்க சமூகம் பல வருடமாக எங்களை நோக்கிக் கல்வீசிக்கொண்டேதான் இருக்கிறது. அதை எதிர்த்துக் களமாடிக்கொண்டிருக்கிறோம். அதன் பலனாகப் பல மாற்றங்களையும் சமூகத்தில் நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம். முதலாளித்துவ நாட்டிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்... நிச்சயம் அவர்களிடம் ஜனநாயகம் இருக்காது, கிடைக்காது. அதிலும் குறிப்பாக ட்ரம்ப்பிடமிருந்து ஜனநாயக சிந்தனையா.... சிம்பிளி வேஸ்ட். பொறுப்புக்கு வந்தவுடன் உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியானது, மூன்றாம் பாலினத் தடை என்பதெல்லாம் முதலாளித்துவ ஆணாதிக்க சிந்தனைதான்.

கிரேஸ் பானு
கிரேஸ் பானு

தேர்தல் பரப்புரையிலேயே இதெல்லாம் வெளிப்பட்டது. அதனால் இவர் அதிபராக வந்தால், எங்களுக்கு எதிராகச் செயல்படுவார் என்பதெல்லாம் எதிர்பார்த்ததுதான். முந்தைய ஆட்சியின்போதே இராணுவத்திலிருந்து மூன்றாம் பாலினத்தவரைத் தடை செய்தார். இப்போது விளையாட்டிலிருந்து தடை செய்திருக்கிறார். நான் கடந்த வருடம் அமெரிக்கா சென்றபோது, அங்கிருக்கும் கொள்கைகளை ஆய்வு செய்தேன். அப்போதே சில மாகாணங்களில் 18 வயதுக்குக் கீழே இருப்பவர்கள் பாலின மருந்து எடுத்துக்கொள்வதைத் தடை செய்திருந்தார்கள். இப்போது அதை அனைத்து மாகாணத்திற்கும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.

தற்போது அங்கிருக்கும் போராளிகள் ட்ரம்பின் இந்த முடிவை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். அடுத்த கட்டமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். WHO மூன்றாம் பாலினம் என்பது நோயல்ல என அறிவித்திருந்தது. அதை ஏற்றுக்கொண்டு பல்வேறு நாடுகள் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமைகளைக் கொடுக்கத்தொடங்கினார்கள். தற்போது WHO-விலிருந்து அமெரிக்கா வெளியே வந்திருப்பதால், WHO முடிவுகளை, ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதில் சிக்கல் இருக்கிறது.

மூன்றாம் பாலினம்

எனவே, இது தொடர்பாக வேறு ஆதாரங்களைத் திரட்ட வேண்டிய சூழல் இருக்கிறது. அமெரிக்காவின் இந்த முடிவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு மற்ற நாடுகளும் இதைச் செயல்படுத்துமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. 18 வயதுக்குக் கீழ் இருக்கும் மூன்றாம் பாலினக் குழந்தைகளைப் பாதுகாக்கும் சூழலைதான் தற்போது உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்" என்கிறார் கவலையுடன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Private Bus: 'சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பஸ்?' - மக்கள் விரோத முடிவை எடுக்கிறதா அரசு?

சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், பிப்... மேலும் பார்க்க

மதுரை: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து! - மத்திய அரசு

மதுரையில் அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு விடுத்த ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏலம் விடப்பட்ட நாள்முதல், டங்ஸ்டன... மேலும் பார்க்க

Union Budget: "வரி பயங்கரவாதம்... பாதிக்கும் நடுத்தர வர்க்கம்" - கெஜ்ரிவாலின் 7 பரிந்துரைகள் என்ன?

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. மறுபக்கம், டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இந்த நில... மேலும் பார்க்க

``அப்போது ரெய்டுக்கு பயந்து பதுங்கியிருந்தாரா பழனிசாமி?" - ஐ.பெரியசாமி

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள்களாகவும், 300 ரூபாய் ஊதியம் உயர்த்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்து நிறைவேற்றவில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் அ... மேலும் பார்க்க

Stalin : 'இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்படும்!' - ஸ்டாலின் சொல்வதென்ன?

கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இரும்பின் தொன்மை நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மேலும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல... மேலும் பார்க்க