செய்திகள் :

UP: இடது கண்ணுக்கு பதில் வலதுபுறத்தில் அறுவை சிகிச்சை - 7 வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை!

post image

உத்தரப்பிரதேசம் மாநிலம், மேற்கு கிரேட்டர் நொய்டோவில் உள்ள வணிகம் மற்றும் குடியிருப்பு பகுதி காமா 1.

இந்த பகுதியிலிருக்கும் ஆனந்த் ஸ்பெக்ட்ரம் மருத்துவமனையில் நவம்பர் 12-ம் தேதி, 7 வயது சிறுவனிற்கு கண்ணில் அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது .

சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் பொழுது தான் அந்த சிறுவனின் தாயார் சிகிச்சை தவறான கண்ணில் நடந்துள்ளதை பார்த்துள்ளார்.

யுதிஷ்டிர் என்ற 7 வயது சிறுவனிற்கு இடது கண்ணில் அடிக்கடி கண்ணீர் வருகிறது என அந்த மருத்துவமனையில் காண்பித்த போது, சிறிய பிளாஸ்டிக் போன்ற துரும்பு கண்ணில் உள்ளது. அதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம் என்று கூறியுள்ளனர்.

ஆபபரேஷனுக்கு சம்மதம் தெரிவித்து ₹45,000 கட்டணத்தை மருத்துவமனையில் செலுத்தியுள்ளார் சிறுவனின் தந்தை நிதின் பாத்தி.

அறுவை சிகிச்சை தவறான கண்ணில் நடந்துள்ளது குறித்துப் பேச உடனடியாக மருத்துவமனையை சென்றடைந்த சிறுவனின் குடும்பத்தினர் மருத்துவர்களிடம் முறையிட்டுள்ளனர். அதற்கு அங்கிருந்த மருத்துவர் மற்றும் ஊழியர்கள் சண்டையிட்டுள்ளனர்.

இதனால் கௌதம் புத்தா நகரில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரியிடம் (CMO- Chief Medical Officer) யுதிஷ்டிரின் தந்தை நிதின் அந்த மருத்துவரின் மருத்துவ உரிமம் (doctor license) ரத்து செய்யப்பட்டு ஆனந்த் ஸ்பெக்ட்ரம் மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளது, விரைவில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் - அடுத்தது என்ன?

கொலை வழக்குஆம்ஸ்ட்ராங்பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் உள்ள வீட்டின் அருகே ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த செம்பியம் போலீஸார், ... மேலும் பார்க்க

மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்: தாக்கியவரின் தாய் மருத்துவர் மீது போலீஸில் புகார்!

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருபவர் பாலாஜி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியிலிருந்தபோது புதுபெருங்களத்தூரைச் சேர்ந்த இன்ஜினீயர் விக்னேஷ் என்பவரால்... மேலும் பார்க்க

கொடிக் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநர் பலி; ராமநாதபுரத்தில் அலட்சியத்தால் தொடரும் பலிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள், திருமண விழாக்களில் பங்கேற்க வரும் அரசியல் தலைவர்களை வரவேற்பதற்காகச் சாலையின் இரு புறங்களிலும் அரசியல் கட்சிகள் தங்களின் கட்சிக் கொடிக் கம்பங்களை ... மேலும் பார்க்க

சென்னை: போலீஸ் வாகனத்தில் மது அருந்திய சிறப்பு எஸ்.ஐ; வீடியோ வைரலான நிலையில் பணியிடை நீக்கம்!

கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போலீஸ் வாகனத்தில் பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ (சிறப்பு உதவி ஆய்வாளர்) ஒருவர் மது அருந்தும் காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதுகுறித்து விசாரிக்க போலீ... மேலும் பார்க்க

சென்னை: வீட்டில் எலிக்கு வைக்கப்பட்ட மருந்தின் நெடியால் பலியான 2 குழந்தைகள்; சிகிச்சையில் பெற்றோர்!

சென்னை குன்றத்தூரில், வீட்டில் எலித் தொல்லை காரணமாக அவற்றைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடியால், 6 வயது மற்றும் ஒரு வயதில் இரண்டு குழந்தைகளின் உயிர் பறிபோன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட 2 சீன கைதிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை- காரணம் என்ன?

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. பண மோசடி, போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த முகா... மேலும் பார்க்க