செய்திகள் :

Valentine's Day: டேட்டிங் ஆப், Situationship, `EX'-கிட்ட பேசலாமா?; மனநல ஆலோசகர் சொல்வதென்ன?

post image
காதல் எல்லா காலங்களிலும் ஒரே மாதிரித்தான் இருக்கிறது. அதன் வடிவங்களும், பரிமாணங்களும்தான் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறது.

சமூக - பொருளாதார மாற்றங்களுக்கேற்ப அதன் பிரச்னைகளும் வெவ்வேறு வடிவங்களில் மாறி வருகிறது. இந்தத் தலைமுறையினர் அதிக கேட்கும் கேள்விகள் குறித்து மனநல ஆலோசகர் ப்ரீனு அவர்களிடம் உரையாடினோம். அவற்றின் தொகுப்பே இது....

இந்தத் தலைமுறையினரின் காதல் எப்படி இருக்கிறது?

இப்போது இருக்கிற தலைமுறையினர் வேகமாக ஓடிட்டு இருக்காங்க. தங்களைத் தனிமைப்படுத்திக்கிறார்கள். நிறைய மன அழுத்தங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். நிரந்தரமாக எதையும் வைத்துக் கொள்ள முடியாத மனநிலை இருக்கிறது.

இளைப்பாறுவதற்காக குறுகிய காலத்திற்கு மட்டுமே ஏதோவொரு உறவுத் தேவைப்படுகிறது. 'Situationship, Breadcrumbing, Textlationship, Friends With Benefits, Benching' என விதவிதமாக அதற்குப் பெயர் வைத்துக் கொள்கிறார்கள். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், 'கொஞ்ச நாள்தான் இருப்பேன், இது ஷார்ட் டைம் ரிலேஷன் ஷிப்தான்' என எச்சரிக்கைப் பாதாகைகளை மாட்டிக் கொண்டுதான் எந்தவொரு உறவிற்குள்ளும் செல்கிறார்கள்.

எந்த மாதிரியான உறவில் இருக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதை ஆரோக்கியமானதாகப் பார்க்கிறேன். ஆனால், தங்களுக்கு உண்மையிலேயே என்ன தேவை என்றே தெரியாமல், எதையும் தீர்க்கமாக யோசித்து முடிவுகள் எடுக்காமல், அவ்வப்போது கிடைக்கிற உறவில் சிக்கி பிரச்னைகளில் மாட்டிக்கொள்கிறார்கள்.

திடீர் காதல், திடீர் காதல் முறிவுகள் ஆரோக்கியமானதா?

இன்ஸ்டாகிராம் ஷார்ட்ஸ், யூடியூப் ரீல்ஸ் என எல்லாமே 30 நொடி, ஒரு நிமிடம் என பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டோம். நேரம் அதிமாக இருக்கும் காணொலியைக்கூட நாம் அதிகமாகப் பார்ப்பதில்லை. எதுவும் சீக்கிரமே நடந்துவிட வேண்டும் என்ற மனநிலை உருவாகிட்டது. அதே மனநிலைதான் காதலிலும், எந்தவொரு உறவிலும் ஏற்பட்டிருக்கிறது.

ஒருவரை முழுமையாகப் புரிந்து கொள்ளாமலேயே பலரும் திடீரென அவசரப்பட்டு உறவில் சிக்கிக் கொள்கிறார்கள். பிறகு அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள், மன அழுத்தத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். இவையெல்லாம் ஆரோக்கியமற்றவைதான். இந்த தலைமுறையினர் எதையும் பொறுமையுடனும், நிதானத்துடன் கையாள வேண்டும்.

டேட்டிங் ஆப்பில் இருக்கும் உளவியல் சிக்கல்

காதலை மட்டுமல்ல நட்பைத் தேடுவதற்காகவும் டேட்டிங் ஆப்பைப் பயன்படுத்துகிறார்கள். பேசுவதற்கு, பழகுவதற்கு யாருமில்லை என்கிற தனிமையில் இருப்பவர்களே அதிகமாக டேட்டிங்க் ஆப்பைப் பயன்படுத்துகிறார்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் நேராகப் பார்த்துப் பேசி பழக முடியாமல், டேட்டிங் ஆப்களில் காதலையோ, நட்பையோ தேடுவது ஒருவித உளவியல் சிக்கல்தான். நேராகப் பழக முடியாமல் நம்முடைய முகத்தை, குணத்தை மறைத்துக் கொண்டு டேட்டிங் ஆப்பில் ஒருவரிடம் பழகுவது அவர்களிடம் உளவியலில் சிக்கல்கள் இருப்பதைக் காட்டுகிறது.

டேட்டிங் ஆப்பில் கவனம் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முகப்பில் இருக்கும் புகைப்படம் உண்மையானதா, அந்த நபரின் விவரங்கள் உண்மையானதா என்பதை மிகுந்த கவனத்துடன் உறுதி செய்துகொள்ள வேண்டும். தனிப்பட்ட புகைப்படங்களை பகிரவே கூடாது. தனிப்பட்ட விஷயங்களை, குடும்பம் பற்றிய விஷயங்களை பேசவே கூடாது. அவர்கள் பேசுவது முன்னும், பின்னும் முரணாக, அவர்கள் சொல்லும் கதைகள் தொடர்ச்சியற்றதாக இருந்தால் கொஞ்சம் உஷாராகிவிடுங்கள். சந்திப்பது என்றால் பொதுவெளியில் சந்த்தித்துக் கொள்ளுங்கள். இது சரியில்லை என்று உங்கள் உள் உணர்வு சொல்லும், அதைக் கேளுங்கள். ஏதேனும் தவறாகத் தோன்றினால் உடனே பேசுவதை தயங்காமல் நிறுத்திவிடுங்கள்.

பிரேக்கப்பை எப்படி சொல்லி புரிய வைப்பது?

காதலை முறிக்க முடிவெடுத்துவிட்டால், முதலில் பேசிப் புரிய வைக்க வேண்டும். இருவரும் சேர்ந்து எல்லாவற்றையும் பேசித் தீர்க்க வேண்டும். காதல் முறிவைச் சொல்பவர்களை விடவும், அதைக் கேட்பவருக்கே அதிக வலி இருக்கும். அதனால் எதிரில் இருப்பவர்கள் புரிந்துகொண்டு, ஆசுவாசம் அடையும் வரை அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். குறுகிய காலம் மட்டுமே அவர்களுக்குத் துணையாக இருந்துவிட்டு, அதன்பிறகு தொடர்பில் இல்லாமல் போய்விடுவது இருவருக்கும் நல்லது. ஆனால், காதல் பிரிவைச் சொல்லாமலே திடீரென காணாமல்போவது சரியல்ல.

காதல் முறிவைக் கையாளுவது எப்படி?

ஒருவர் இறந்துபோனால் என்ன வலி இருக்குமோ, அதே வலிதான் காதல் முறிவிலும் இருக்கும். முதலில் சும்ம பொய் சொல்கிறார்கள் என்று தோன்றும், செய்த தவறுகள் குறித்து கேள்விகள் கேட்பார்கள், மறுப்புகள் வரும், கோபம், சோகம் வரும், கடைசியில்தான் காதல் முறிவை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வரும். ஒருவர் காதல் முறிவிலிருந்து முழுமையாக வெளியே வர 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை ஆகும்.

தினமும் பேசியிருப்போம், நடப்பது எல்லாத்தையும் உரையாடியிருப்போம், அவங்களுக்காகவே வாழ்ந்து பழகியிருப்போம். அதிலிருந்து வெளியே வந்து நமக்காக வாழப் பழக வேண்டும். தினமும் நாம் பார்க்கும் பணிகளை நிறுத்தி வைக்காமல் வலியைத் தாங்கிக் கொண்டு செய்ய வேண்டும். சும்மா இருந்தா அதைவிட்டு வெளியே வருவது கஷ்டமாகிவிடும். பேசாமல் இருந்த குடும்பத்தினரிடம், பெற்றோரிடம், நல்ல நண்பர்களிடம் பேசுங்கள். அந்த வலியில் இருந்து சீக்கிரம் வெளியில் வந்துவிடலாம்.

உடம்பில் ஒரு காயம் ஏற்பட்டால் எப்படி குண்மாகுமோ அப்படித்தான் இதுவும். காயம் குணமாவதற்குள் அந்தக் காயத்தை நோண்டிக் கொண்டே இருக்கக் கூடாது. அதைத் தொந்தரவு செய்யாமல் அதற்குரிய கால அவகாசத்தைக் கொடுக்க வேண்டும்.

காதல் முறிவில் தவறான பழக்கங்களில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

காதல் முறிவில் புதிதாகத் தவறான பழக்கங்களுக்குள் செல்பவர்கள் குறைவுதான். ஏற்கெனவே தவறான பழக்கங்களில் இருப்பவர்கள், காதல் முறிவின் வலியால் அதிகமாக அதைச் செய்வார்கள். லட்சியங்களை நோக்கி ஓடுங்கள், உடற்பயிற்சி, உங்கள் நலனில் அதிக அக்கறை செலுத்துவது, நல்ல நண்பர்களின் உரையாடுவது என கவனத்தைத் திறப்பி தவறான பழக்கங்களில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளலாம்.

'EX'-கிட்ட எப்படி மறுபடியும் பேசலாமா?

இருவருக்கும் சந்தோஷமான வாழ்க்கையிருக்கிறது என்றால் மீண்டும் பேசுவதில் பிரச்னையில்லை. ஆனால், வாழ்க்கையில் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் எக்ஸிடம், மீண்டும் பேசுவதன் மூலம், முறிந்த அந்தக் காதல் மீண்டும் துளிர்க்க அதிக வாய்ப்பிருக்கிறது. வேறு ஒரு கமிட்டான உறவில் இருப்பவர்கள் மீண்டும் எக்ஸிடம் பேசுவது தேவையில்லாத சிக்கல்களைத்தான் கொண்டுவரும். எக்ஸிடம் நட்பைப் பற்றி மட்டுமே பேசுங்கள், காதலைப் பற்றி ஒருபோதும் பேசாதீர்கள்.

இந்தத் தலைமுறையினரின் காதல் குறித்த உங்களின் கேள்விகளை கமெண்டில் பதிவிடவும்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Mental Health: `3% இந்தியர்களே டெக்னாலஜியை சரியாக பயன்படுத்துகின்றனர்' - ஆய்வறிக்கை சொல்வதென்ன?

மொபைல் வாங்குவது முதல் கேட்ஜெட்களால் நம்மை அப்கிரேட் செய்துகொள்வது வரை போட்டிப்போட்டு தொழில்நுட்பங்களை நுகரும் நாம், அது குறித்த விழுப்புணர்வுடன் இருக்கிறோமா?பிரைன் ராட் (Brain Rot), டூம் ஸ்க்ரோலிங் (... மேலும் பார்க்க

மனநலப் பிரச்னைகளும் இன்ஸ்டாகிராம் ஐடிகளும்... என்ன நடந்துகொண்டிருக்கிறது சமூக வலைத்தளங்களில்..?

''மனநலம் குறித்த விழிப்புணர்வு ஒருபக்கம் பாசிட்டிவாக வளர்ந்துகொண்டிருக்க, மறுபக்கம் இல்லாத பிரச்னைகளை இருப்பதாகச் சொல்வது... சிறிய பிரச்னைகளைப் பெரிய மனநல பிரச்னையாக நினைத்துக்கொள்வது என இந்த இளம் தலை... மேலும் பார்க்க

Anger Management: ஆரோக்கியமான கோபம், உரிமை கோபம்... நம்முடைய கோபத்தை எப்படி கையாளுவது?

''சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் எனக்குக் கோபம் வருது டாக்டர். கையில கிடைச்சதைத் தூக்கி வீசறேன். பிள்ளைங்களை அடிச்சுட்டு, அப்புறம் நானே அழறேன். இது தப்புன்னு புரியுது. ஆனால், என்னால கோபத்தை கன்ட்ர... மேலும் பார்க்க

Mental Health: உங்களுக்கு மன அழுத்தம் இருக்கா; இல்லையா..? கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட்!

'டென்ஷன்’ - இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. அந்த அளவுக்கு வீட்டிலும், வெளியிலும், எங்கேயும், எப்போதும் டென்ஷனும் நம்முடனே பயணிக்கிறது. டென்ஷனாக இருக்கும்போது, வேலையில் ஈடுபாடின்மை, நம்பிக்கை... மேலும் பார்க்க

Doctor Vikatan: தனக்குத்தானே பேசிக்கொள்ளும் மாமனார்: முதுமைதான் காரணமா... சிகிச்சை அவசியமா?

Doctor Vikatan:என் மாமனாருக்கு 75 வயதாகிறது. மாமியாரும் அவரும் தனியே வசிக்கிறார்கள். சமீப காலமாக என் மாமனார் தனக்குத்தானே பேசிக்கொள்கிறார். வெளியே செல்லும்போதும் இதைச் செய்கிறார். மறைந்திருந்து பார்த்... மேலும் பார்க்க