செய்திகள் :

Vijay: `பா.ஜ.க-வோடு சேரவே மாட்டேன்; என் தலைமையிலேயே கூட்டணி!' -செயற்குழுக் கூட்டத்தில் விஜய் பளிச்

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் நிர்வாகிகள் மத்தியில் விஜய் சில முக்கியமான விஷயங்களை பேசியிருக்கிறார்.

Vijay
Vijay

விஜய் பேசியதாவது, 'கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் மறைமுகமாகவோ நேரடியாகவோ கூட்டணி இல்லை. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தி குளிர்காய நினைக்கிறது பா.ஜ.க.

அவர்களின் விஷமத்தனமான வேலைகள் எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். தமிழகத்தில் எடுபடாது. சகோதரத்துவமும் சமத்துவமும் ஊறிய மண் இது. தந்தை பெரியாரையோ, அண்ணாவையோ அவமதித்து அரசியல் செய்ய நினைத்தால் அவர்களால் ஒரு போதும் வெல்ல முடியாது. சுயநலத்துக்காக பா.ஜ.கவுடன் கூட்டணி செல்ல திமுகவோ அதிமுகவோ இல்லை நாம்.

Vijay
Vijay

கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுகவுக்கும் பாஜகவுக்கும் எதிராகத்தான் அமையும் என்பதை உறுதிபட சொல்லிக் கொள்கிறேன்.' என்றார்.

செயற்குழுக் கூட்டத்தில் விஜய் இரண்டு தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றியிருந்தார். ஒன்று திமுகவுக்கு எதிராகவும் இன்னொன்று பா.ஜ.கவுக்கு எதிராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Vijay: 'தலைமைச் செயலகம் போக விஜய் மட்டும் தேதி குறிக்கட்டும்....! - பரந்தூர் விவசாயிகள் ரியாக்சன்

'பரந்தூருக்கு ஆதரவாக தீர்மானம்!'தவெக கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். நிகழ்வில் பரந்தூர் சம்பந்தமாக விஜய் வாசித்த தீர்மானம் கவனம் பெற்றிருந்தது. '1500 குடும்பம்தான்னு ச... மேலும் பார்க்க

பாஜக நண்பன், திராவிட மாடலுக்குத் தோழன்; சென்னையை ஆக்கிரமித்து மிரட்டும் குஜராத் போஹ்ரா முஸ்லிம்கள்!

வெளிர்நிற முழுகுர்தா மற்றும் பைஜாமா, தலையில் டிசைன்களுடன்கூடிய தொப்பி சகிதம் ஆண்கள்; இதேபோல உடல் முழுமையும் கவர் செய்யும் வகையில பலவண்ணங்களில் தலையையும் சேர்த்து கவர் செய்யக்கூடிய டாப் மற்றும் பாட்டம்... மேலும் பார்க்க

Vijay : மக்கள் முதல்வர்னு எப்படி நாக்கு கூசாமா சொல்றீங்க? - ஸ்டாலினை கடுமையாக சாடிய விஜய்!

'தவெக செயற்குழுக் கூட்டம்!'தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் நிர்வாகிகள் மத்தியில் விஜய் சில முக்கியமான விஷயங்களை பேசியிர... மேலும் பார்க்க

TVK : 'ஆகஸ்ட்டில் பிரமாண்ட மாநாடு; விஜய்தான் முதல்வர் வேட்பாளர்!' - தவெகவின் முக்கிய தீர்மானங்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் நடந்திருந்தது. இதில் சில முக்கியமான தீர்மானங்களை தவெக நிறைவேற்றியிருக்கிறது. குறிப்பாக, 2026 தேர்தலை தவெக தலை... மேலும் பார்க்க

'12 தொகுதிகள் டு திமுக-வை விமர்சிக்க மாட்டேன்' - அப்செட்டில் வைகோ; தகிக்கும் தாயகம்!

தாயத்தில் வீசும் புயல்!நீண்டகாலமாக சைலன்ட் மோடிலிருந்த தாயகத்தில் சமீபகாலமாக புயல் வீசத்தொடங்கியிருக்கிறது. ம.தி.மு.க முதன்மைச் துரை வைகோவுக்கும், துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா இடையிலான 'ஈகோ' மோத... மேலும் பார்க்க