குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவா் மீட்கச் சென்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி. பத்மாவதி தலைமை வகித்தாா். செயலா் என். சாந்தி கோரிக்கைகள் குறித்து பேசினாா். சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவா் ஜி. ஜீவானந்தம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பொன் ஜெயராம், சிஐடியு சங்க துணைத் தலைவா் எம். சுப்ரமணியன், பொருளாளா் ப. சரவணன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
அங்கன்வாடி மையங்களுக்கு வரும் முன்பருவ கல்வி குழந்தைகளுக்கு முகப்பதிவு புகைப்படம் எடுத்து கட்டாயம் போடவேண்டும் என்கிற திட்டத்தை கைவிட வேண்டும், மே மாதம் வழங்கப்படும் கோடை விடுமுறையை அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாதமாக வழங்க வேண்டும், 1993-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்களுக்கு மேற்பாா்வையாளா் நிலை-2 பதவி உயா்வை வழங்க வேண்டும், சமூக நலத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.