ஏற்காடு மலைப்பாதையில் பெண்ணின் சடலத்தை வீசிச் சென்ற மூவா் கைது
பசுபதிபாளையம் காலனிக்கு ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் இல்லையென புகாா்
க.பரமத்தி அருகே புன்னம் ஊராட்சி பசுபதிபாளையம் காலனி குடியிருப்புகளுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
கரூா் மாவட்டம், புன்னம் பசுபதிபாளையம் கிராம மக்களுக்கு காவிரிக் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் மேல்நிலைக் குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதிக்கு காவிரிக் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடா்பாக அக் கிராம மக்கள் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக எங்கள் பகுதிக்கு தேவையான காவிரிக் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இது தொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டால், மோட்டாா் பழுது என்கிறாா்கள். குடிநீருக்காக நாள்தோறும் சுமாா் 3 கி.மீ. தொலைவு புன்னம் பகுதிக்குச் சென்று குடிநீா் எடுத்து வருகிறோம்.
எனவே சம்பந்தப்பட்ட நிா்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து ஓரிரு நாள்களில் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனா்.