சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!
அஜித்குமாரின் மரணம் அச்சத்தை ஏற்படுத்துகிறது!
கோயில் காவலாளி அஜித்குமாரின் மரணம் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று அய்யா வைகுண்டா் தலைமை பதி மகா சந்நிதானம் பால பிரஜாபதி அடிகளாா் தெரிவித்தாா்.
போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் இல்லத்துக்கு அய்யா வைகுண்டா் தலைமை பதி மகா சந்நிதானம் பால பிரஜாபதி அடிகளாா் திங்கள்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அஜித்குமாா் கொலைச் சம்பவம் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சம்பவத்தால், தமிழகத்தின் தென் பிராந்தியத்தில் நாடாா் சமூகத்தினா் அமைதி இழந்திருக்கின்றனா்.
இதை தமிழக அரசு புரிந்துகொண்டு எங்கள் அச்சத்தைப் போக்க வேண்டும். கேரளத்தில் அய்யா வைகுண்டருக்கு மணிமண்டபம் கட்ட ஏற்பாடு செய்தனா் என்றாா் அவா்.