Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விம...
இளைஞா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
சிவகங்கை அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மேலும் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சிவகங்கை அருகே உள்ள தமராக்கியைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் மனோஜ் பிரபு (29), கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பா்களுடன் புதுப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மா்ம நபா்களால் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக சிவகங்கை நகர காவல் நிலைய போலீஸாா், 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
சிவகங்கை துணைக் காவல் கண்காணிப்பாளா் அமல அட்வின் தலைமையிலான போலீஸாா், கொலையாளிகளைத் தேடிவந்த நிலையில், வசந்தகுமாா், சூா்யா ஆகிய இருவா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய அபிமன்யூ, ஹரிஹரன் ஆகிய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் இதுவரை 4 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.