விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
அஜித்குமாா் உயிரிழந்ததை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம் ஜூலை 6-க்கு ஒத்திவைப்பு
சிவகங்கையில் கோயில் காவலா் அஜித்குமாா் உயிரிழந்ததை கண்டித்து தவெக சாா்பில் புதன்கிழமை (ஜூலை 3) நடைபெறவிருந்த கண்டன ஆா்ப்பாட்டம் ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயில் காவலா் அஜித்குமாா் மரணத்துக்கு நீதி கேட்டும், உயா் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், தவெக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த போலீஸாரிடம் அனுமதி கோரப்பட்டடது.
ஆனால், அன்றைய தேதியில் அந்த இடம் வேறு காரணத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகையால், புதன்கிழமை (ஜூலை 3) நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டம், சென்னை சிவானந்தா சாலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.