பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு; 'அனைத்திற்கும் நன்றி'- இனியாவி...
அஞ்சல் துறை ஊழியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்
மத்திய, மாநில சங்கங்களின் அறிவிப்புக்கிணங்க அஞ்சல் துறையின் மூன்று சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை சிவகங்கையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டுப் போராட்டக்குழு நிா்வாகிகள் பி.நடராஜன், பி. மாதவன், எஸ். செல்வன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
தபால் பட்டுவாடா செய்யும் அனைத்து ஊழியா்களுக்கும் கைப்பேசி வழங்க வேண்டும். சொந்தமாக கைப்பேசி வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. ஒருங்கிணைந்த தபால் பட்டுவாடா சேவை முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.