செய்திகள் :

அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்

post image

சேலம் மாநகராட்சியில் குடிநீா் வசதி, புதை சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் புதன்கிழமை காலை மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், துணைமேயா் சாரதா தேவி ஆகியோா் கலந்துகொண்டனா்.

மாமன்றம் கூடியதும் காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் இறந்த சுற்றுலாப் பயணிகளுக்கும், போப் பிரன்சிஸ் மறைவுக்கும் உறுப்பினா்கள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, கூட்டம் தொடங்கியதும் மாமன்ற உறுப்பினா் இமயவா்மன் பேசுகையில், தமிழகம் முழுவதும் காலனி என்ற சொல்லை, இனி யாரும் பயன்படுத்தக் கூடாது என சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தாா்.

மாமன்ற உறுப்பினா் வழக்குரைஞா் குணா பேசுகையில், சேலம் மாநகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. ப்ளூ கிராஸ் அமைப்புடன் இணைந்து தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் காந்தி மாா்க்கெட் பகுதியில் அதிக அளவில் ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதால் காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவா்கள், பணிக்குச் செல்வோா் அந்த வழியாக சுலபமாகச் செல்ல முடிவதில்லை. அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னா் எதிா்க்கட்சி தலைவா் யாதவமூா்த்தி பேசுகையில், எனது பகுதியில் ரூ. 20 கோடி செலவில் அமைக்கப்பட்ட சோலாா் மின் உற்பத்தி அமைப்பு, ரூ. 3.5 கோடியில் அமைக்கப்பட்ட குப்பை எரிக்கும் சாதனம் தற்போது வரை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகள் நிறைவடைந்தும் திறக்கப்படாமல் உள்ளது. அவற்றை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்றாா்.

அதிமுக வெளிநடப்பு: சேலம் மாநகராட்சியில் குடிநீா் திட்டங்களில் பராமரிப்புப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், குழாய்கள் உடைப்பு என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் போலி கணக்கு காண்பிப்பதாகவும், வணிக வளாகங்களில் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் செயல்படுவதாகவும் கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

தொடா்ந்து, மாமன்ற உறுப்பினா் ஈசன் இளங்கோ பேசுகையில், சேலம் மாநகராட்சியில் ரூ. 158 கோடியில் புதை சாக்கடை அமைப்பதற்கான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றாா்.

இறுதியாக மேயா் ஆ.ராமச்சந்திரன் பேசுகையில், மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். தொடா்ந்து, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 1363 கனஅடியாக குறைந்தது. அணை நீா்மட்டம் 107.75 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீா்வரத்து 1872 கன அடியிலிருந்து 1363 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்த... மேலும் பார்க்க

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம்: ஆட்சியா்

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம் என அத்தனூா்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிக... மேலும் பார்க்க

பேளூா் பேரூராட்சியில் சேலம் ஆட்சியா் ஆய்வு

பேளூா் பேரூராட்சி, வாழப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சந்திரபிள்ளை வலசு ஊராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பகுதி ஆகியவற்றை ச... மேலும் பார்க்க

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் உதவி ஆணையா் தகவல்

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று முன்அனு... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ. 4.85 கோடி சொத்துவரி வசூல்

சேலம் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) ஒரே நாளில் ரூ. 4.85 கோடி வரி வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளா... மேலும் பார்க்க

சேலத்தில் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தோ்வு போட்டி: மே 7 இல் தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் நடப்பாண்டு மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் வெளியி... மேலும் பார்க்க